01. ஓமவல்லி இலை மூன்றினை காலையில் மென்று தின்று ஒரு தம்ளர் வெந்நீர் சாப்பிட்டால் இதய வலி தீரும். மாலையில் கீரையாக உண்டால் சளித் தொல்லை தீரும்.(109)
02. குழந்தைகளுக்குச் சளித்தொல்லை நீங்க, வெள்ளைப் பூண்டு, வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி ஆகியவை எடுத்து அரைத்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.
03. மாதுளம் பழச் சாறு, எலுமிச்சம் பழச் சாறு இரண்டையும் கலந்து குடித்து வந்தால், சளித் தொல்லை தீரும்.(114)
04. மழைக்காலங்களில் முசு முசுக்கை இலையைச் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் வர விடாமல் தடுக்கலாம்.(115)
05. கற்பூரவல்லி இலையை அரைத்துச் சாறு பிழிந்து சற்று சூடாக்கி நெற்றியில் பூசினால் சளி உடனே குணமகும்.(116)
06. சிற்றரத்தைப் பொடி ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீர்க்கோவை சரியாகும். சுரம், சளி, ஈளை, இருமல், தொண்டைப் புண், வாயு ஆகியவையும் நீங்கும்.(120)
07. சில குழந்தைகளுக்குத் தலைக்குத் தண்ணீர் ஊற்றினால் சளி பிடித்துக் கொள்ளும். இதற்குத் தீர்வு இதோ: எப்போது தலைக்குத் தண்ணீர் ஊற்றுகிறோமோ அப்போது பத்து துளசி இலைகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து குளிப்பாட்ட வேண்டும். அப்படியும் சளி பிடித்தால் கற்பூரவல்லி இலைச் சாறு ஒரு பாலாடை / அரைப்பாலாடை எடுத்து தாய்ப் பாலுடன் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல்)
=====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)20]
{05-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக