மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

மலம் - மலச்சிக்கல் (Constipation)

 

01. அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, காலை மாலை  ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.(356)

 

02. அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்டு வந்தால் மலச் சிக்கல் வராது.


03. ஆப்பிள் பழத் துண்டுகள் சிலவற்றைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் இருக்காது. (1214)


04. எலுமிச்சம் பழச் சாறுக்கு மலச் சிக்கலைப் போக்கும் தன்மை உள்ளது..(1217)

 

05. கடுக்காய்த் தூளை அரைத் தேக்கரண்டி எடுத்து  வெந்நீரில் கலந்து இரவில் ஒரு வாரம் குடித்து வந்தால், செரியாமை, மலச்சிக்கல் தீரும்.

 

06. கடுக்காய்த் தோல், கிராம்பு தலா 15 கிராம் போட்டு, ஒரு தம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைத்து ஆறியதும், அதிகாலை குடிப்பவர்களுக்கு மலச் சிக்கல் சீரடையும்.

 

07. கருங்காக்கரட்டான் வேரைப் பால் ஆவியில் வேக வைத்து, உலர்த்திப் பாதியளவு சுக்குடன் பொடித்துக் காலை மாலை 50 மி.கி வெந்நீரில் கொடுக்க,  குழந்தைகளுக்குக் காணும் மலச் சிக்கல் தீரும்.

 

08. கறிவேப்பிலையுடன் சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த பெருங்காயம் ஆகியவற்றைச் சம அளவு  சேர்த்து இடித்துச் சூரணம் செய்து சுடு சோற்றில் கலந்து நெய் விட்டுப் பிசைந்து உண்டால் மலச் சிக்கல் தீரும்.

 

09. காய்ந்த திராட்சைப் பழம் வாங்கி பசும் பாலில் ஊற வைத்து அரை மணி நேரத்திற்குப் பின்  அழுத்திப் பிழிந்து அந்தச் சாறை வடிகட்டிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும்  மலச்சிக்கல் தீரும்.(348)  (663)

 

10. கொள்ளினைச் முளை கட்டிச் சுண்டல் செய்து சாப்பிட்டால் மலச் சிக்கல் தீரும்.

 

11. சரக்கொன்றை மரப் பூவைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டு, பால் அருந்தினால் மலச்சிக்கல் வராது. (344)(646)

 

12. சிற்றாமணக்கு எண்ணெயில் 20 மி.லி. எடுத்து 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுக்க மலச்சிக்கல் தீரும்.

 

13. செம்பருத்தி இலைகளைத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி  இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் அகலும்.(359) (1149)

 

14. தான்றிக் காய்ப் பொடியுடன் சிறிதளவு கடுக்காய், நெல்லிக்காய், நீர்முள்ளி ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் வராது.

 

15. திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இராது. சுரத்தைப் போக்கும். இரத்தம் சுத்தமடையும். (384)


16. திராட்சைப் பழம் (உலர் திராட்சை)  வாங்கி பசும் பலில் ஊற  வைத்து அரை மணி நேரத்திற்குப் பின் பால் உறிஞ்சிய திராட்சைப் பழங்களை அழுத்திப் பிழிந்து அந்த சாறை வடிகட்டி குழந்தகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் மலச்சிக்கல் தீரும்.(348) (663)


17. தூதுவேளைக் காயை உலர்த்தி, தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டு வர , பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

 

18. .நமது கையின் மோதிர விரலின் மேற்பகுதியில் 10 – 15 நிமிடம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தால் மலச்சிக்கல் தீரும். (இது ரெய்கி மருத்துவம்)

 

19. நாரத்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கும். செரிமான சக்தியைக் கொடுக்கும்.(385)

 

20. நிலஆவாரை இலையைத் துவையல் செய்து இரவு உணவுடன் உண்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

 

21. நிலாவாரை இலையைத் தூள்செய்து 2 அல்லது 3 கிராம் அளவில் இரவில் மட்டும் வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

 

22. நீர்பிரம்மிச் சாற்றை ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்தால் மலக் கட்டு நீங்கும்.


23. நுணா மர வேரைக் கசாயம் வைத்துக் குடித்து வந்தால் மலச் சிக்கல் குணமாகும்.  (1283)  சுக பேதியாகும்   (1426)


24. நெல்லிக் காயினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் இராது.  (1311)


25. பப்பாளிப் பழம் நாள்தோறும் ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் வராது. வந்தாலும் குணமாகிவிடும். (369) (1168)

 

26. பரங்கிப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், தினசரி சில துண்டுகளை உண்டு வந்தால் மலக் கட்டு நீங்கும்.

 

27. பால் பெருக்கி இலையை வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.  (1289) (1473)

 

28. பேரீச்சம் பழத்தை இரவில் பாலில் ஊறவைத்து, அதிகாலை எடுத்துப் பிசைந்து சாப்பிட்டால் மலக்கட்டு நீங்கும்.(347)

 

29. மந்தாரைப்பூச் சூரணம் சர்க்கரை கலந்து 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் தீரும்.

 

30. மாதுளை முத்துக்களை எடுத்து, விதையுடன் சேர்த்துச் தினமும், சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் தீரும்.


31. மாம்பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் இருக்காது.  (367)

 

32. மிளகாய்ப் பூண்டு இலையைக் கீரை போல் வதக்கிச் சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் தீராத மலச் சிக்கலும் தீரும். (1546)

 

33. முடக்கத்தான் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் தீரும். வாயுத் தொந்தரவு அகலும். .  (380) (1521) (1558)

 

34. முடக்கற்றான் கீரையை இரசம் வைத்து உண்டால் சிறுநீர் பெருக்கும், மலமிளக்கும், பசியைத் தூண்டும், வாதத்தை அடக்கும், உடலை வலிமைப்படுத்தும்.

 

35. முருங்கை இலைச்சாறு மலச் சிக்கலைப் போக்கி, குடலைச் சுத்தம் செய்யும்.

 

36. முருங்கை இலையைக் கசக்கி, சாறு எடுத்து சிறிது சூடு காட்டி அரைச் சங்கு உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு மலக் கட்டு நீங்கும். வயிறு உப்பிசம் விலகும்.(358)


37. முள்ளங்கி இலை சாறு 5 மி.லி வீதம் 3 வேளை சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கும்.  (1610)

 

38. முளைக் கீரையைச் சமைத்து, உணவுடன் சேர்த்துகொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.(357)

 

39. மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, மிளகு 4 எண்ணிக்கை ஆகியவற்றை 100 மி.லி விளக்கெண்ணெயில் இட்டு வாசனை வரக் காய்ச்சி ஆறவிட்டு வடிக்கட்டி வைத்துக் கொண்டு வாரத்தில் ஒரு நாள், ஒன்று அல்லது இரண்டு வேளை 6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி அளவும், அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 மி.லி வீதமும் கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் மலச் சிக்கல் தீரும்.

 

40. ரோஜாப் பூ இதழுடன் 2 எடை சீனாக் கற்கண்டு கலந்து பிசைந்து, சிறிது தேன் கலந்து 5 அல்லது 6 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்தால் குல்கந்து கிடைக்கும். இந்த குல்கந்தினை கழற்சிக்காய் அளவு காலை மாலை சாப்பிட்டால் மலச் சிக்கல் தீரும்.

 

41. வாதமடக்கித் தைலம் காலை மட்டும் அரை அல்லது ஒரு தேக்கரண்டி கொடுத்துவரக் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச் சிக்கல் தீரும்.

 

42. வாழைப் பழங்கள் தினசரி 3 சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் வராது. வந்தாலும் தீர்ந்துவிடும்.

 

43. வாழைப் பழத்தில் நார்ச் சத்து உள்ளதால் மலச் சிக்கல் நீங்கும். குடற்புண் குணமாகும். பித்தம் சமப்படும். இரத்த அழுத்தம் நிதானப்படும்.

 

44. வில்வ இலைச் சூரணம் அரைத் தேக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய்யில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் வராது. வந்தாலும் குணமாகிவிடும்.

 

45. விளக்கெண்ணெய் 30 மி.லி எடுத்து,  எருக்கு இலைச் சாறு 3 துளி அதில் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் தீரும்.

 

46. விளக்கெண்ணெய் ஒரு கிலோ, 10 முறை கழுவிய சோற்றுக் கற்றாழைச் சோறு ஒரு கிலோ, பனங்கற்கண்டு அரைக் கிலோ, வெள்ளை வெங்காயச் சாறு அரைக் கிலோ ஆகியவற்றைக் கலந்து நீர் சுண்டக் காய்ச்சினால் கிடைக்கும் எண்ணெய்க்குப் பெயர்  குமரி எண்ணெய். ( சோற்றுக் கற்றாழைக்குக் குமரி என்றும் ஒரு பெயர் உண்டு ).இந்த எண்ணெயைத் தயாரித்துப் புட்டியில் அடைத்து வைத்துகொண்டு தேவைப் படும் போது பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் ஒரு தேக்கரண்டி வீதம் காலையும் மாலையும்  கொடுத்தால் மலச் சிக்கல் தீரும்.

 

47. வெந்தயத் தண்ணீர் வாரம் ஒரு முறை குடித்தால் மலச் சிக்கல் தீரும்.


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,கடகம் (ஆடி )16]

{01-08-2021}

==========================================================

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக