மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

வயிறு - சீத பேதி (Dysentery)

 

01.   அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு எடுத்து பொடி செய்து மூன்று சிட்டிகை பாலில் கலந்து உட்கொண்டு வந்தால் சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.(091)

 

02.   அத்திப் பிஞ்சு, வேலம் பிஞ்சு, மாம்பட்டை, சிறு செருப்படை ஆகியவற்றை சமனெடை எடுத்து வாழைப் பூச் சாற்றில் குடிநீரிட்டுக் கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் முதலியன போகும்.

 

03.   அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

 

04.   அந்தரத் தாமரை இலைச்சாற்றை 25 மி.லி எடுத்து தேனுடன் கலந்து காலை, மாலை 5 நாட்கள் கொடுத்து வந்தால் நீர்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

 

05.   அவரை இலைகளைப் பறித்து 25 மி.லி அளவுக்குச் சாறெத்து அதில் 50 மி.லி பசுந்தயிர் சேர்த்துக் கலக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.(103)

 

06.   ஆடாதொடை இலைச் சாறு 2 தேக்கரண்டி எடுத்துஎருமைப் பாலில் கலந்து காலை மாலை கொடுத்துவந்தால் சீதபேதி, இரத்தபேதி குணமாகும்

 

07.   ஏலக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எருமைத் தயிரில் கலந்து 3 வேளை சாப்பிட்டால் சீத பேதி குணமாகும்.

 

08.   கசகசாவுடன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி மூன்று நாட்களில் குணமாகும்(089) (644)

 

09.   கசகசாவை வறுத்துத் தூள் செய்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.(098)

 

10.   கருப்பு எள் ஒரு பிடி, அரைப் பிடி சர்க்கரை இரண்டையும் கலந்து வெள்ளாட்டுப் பால் விட்டுஅரைத்து, அதே வெள்ளாட்டுப் பால் (காய்ச்சாத பால்) அரைத் தம்ளர் எடுத்து அதில் கலந்து குடிக்க வேண்டும். சீதபேதி மட்டுமல்ல எந்த பேதியும் நின்றுவிடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல் பக்கம் 166)

 

11.   கற்றாழையின் இளமடலின் சோற்றுடன் சீரகம், கற்கண்டுசேர்த்து இரத்தமும் சீதமும் கலந்த கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.

 

12.   கீழாநெல்லியின் இளங்கொழுந்தை எடுத்து  குடிநீர் செய்து சீதக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம். இலையை உப்பு சேர்த்து அரைத்து சொறி சிரங்குகளுக்குப் பூசலாம் உப்பில்லமல் அரைத்து சதைச் சிதைவுக்குப் பற்றிடலாம்.

 

13.   கோரைக் கிழங்கும் இஞ்சியும் சம அளவு எடுத்து தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டைக் காய் அளவு சாப்பிட்டால் சீதபேதி கட்டுப்படும்.

 

14.   சின்ன வெங்காயத்தை எடுத்து அரை தம்ளர் அளவுக்குச் சாறு பிழிந்து அத்துடன் ஒரு தம்ளர் தயிர் கலந்து கலக்கி காலை, மதியம், மாலை என் மூன்று வேளைகளாக மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சீத பேதி குணமாகும். புளி, காரம் நீக்கி கஞ்சியாகச் சாப்பிட வேண்டும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல், பக்கம் 163)

 

15.   செம்பருத்திப் பூச் சாறு பூசனிக் காய்ச் சாறு இரண்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  நீர்த்தாரை எரிச்சல், வயிற்றுப் புண், சீதபேதி ஆகியவை தீரும். (1498)

 

16.   நத்தைச் சூரி விதையைப் பொடித்து, சமனளவு கற்கண்டுப் பொடி கலந்து ஐந்து கிராம் அளவாகக் காலை, மதியம், மாலை சாப்பிட்டு வர  வெப்புக் கழிச்சல் (உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றோட்டம்) சீதக் கழிச்சல்  ஆகியவை தீரும்.

 

17.   நெல்லி இலைக் கொழுந்தை அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம். நெல்லிகாயைத் துவையல் செய்து சாப்பிட சுவையின்மை, வாந்தி இவைகளைப் போக்கும். 

 

18.   பசுமாட்டு எரு முட்டையைக் கொண்டு வந்து நெருப்பில் போட்டுச் சாம்பலாக வேண்டும். அதில் ஐந்தாறு சிட்டிகை (தேக்கரண்டியில் பாதியளவு) எடுத்து நீரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நின்று விடும். காலை மாலையாக இரண்டு நாள் குடித்தால் போதும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல் பக்கம் 166)

 

19.   பசுவெண்ணெயுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மூன்று வேளைகள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும்.  (099)

 

01.   பனை நுங்கினை அதன் மேல் உள்ள வெள்ளையான துவர்ப்புச் சுவையுள்ள கடுக்காயை (தோல்) உரிக்காமல் சாப்பிட்டு வந்தால் சீத பேதி குணமாகும்.  (095) (1148)

 

20.   பிண்ணாக்குக் கீரையை பருப்புடன் சமைத்து நெய்யுடன் சோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் உட்சூடு, வெள்ளை, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.(093)

21.   புளியங் கொட்டைத் தோல். மாதுளம் பழத் தோல், ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து பசும் பாலில் மூன்று வேளைகளும் சாப்பிட்டு வந்தால் சீத பேதி குணமாகும்.  (094)

 

22.   பூசணிச் சாறு, செம்பருத்திப் பூச்சாறு, இரண்டையும்  சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நீர்த் தாரை எரிச்சல், வயிற்றுப் புண், சீதபேதி ஆகியவை குணமாகும். (1498) சொட்டு மூத்திரம் குணமாகும்.  (1509)

 

23.   மலை வாழைப் பழத்தை நல்லெண்ணையில் தோய்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.  (097)

 

24.   மாசிக்கயைப் பொடியாக்கி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி சரியாகும்.

 

25.   மாதுளம் பழத் தோலை நன்கு காய வைத்துப் பொடியாக்கி, அதற்குக் கால் பாகம் சாதிக்காய் பொடி சேர்த்து அரைத் தேக்கரண்டி  அளவு நெய் சேர்த்து தினசரி இரு வேளைகள் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சீத பேதி குணமாகும்.

 

26.   மாதுளம் பழத் தோல், புளியங் கொட்டைத் தோல் சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து பசும் பாலில் சாப்பிட்டு வந்தால், சீதபேதி குணமாகும்.  (094)

 

27.   மாதுளம் பழத் தோல் பொடி ஒரு தேக்கரண்டி, சீரகப் பொடி அரை தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து இரண்டு மூன்று வேளைகள் உள்ளுக்குச் சாப்பிட்டால் சீதக் கழிச்சல் தீரும்

 

28.   மாதுளம் பிஞ்சுகளைப் பறித்து அதன் உள்ளே உள்ள விதைகளை அரைத்துக் கொடுத்தாலும் சீதபேதி குணமாகும். (ஆதாரம்: இனம் 1 & 2. “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல், பக்கம் 164))

 

29.   மாம்பருப்பு, அசோகு பூ சம அளவு எடுத்து, பொடி செய்து 3 சிட்டிகை பாலில் கலந்து உட்கொண்டால், சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.  (091)

 

30.   வாழைப்பூ வெள்ளை, வெறி, உடல் கொதிப்பு, சீதபேதி, ஆசன வாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும். ஆண்மை தரும்.

 

31.   வாழைப்பூவை அனலில் வாட்டி சாறு பிழிந்து ஒரு முடக்கு குடித்து வந்தால் சீதபேதி, இரத்த மூலம் கட்டுப்படும். (1264)

 

32.   மலை வாழைப் பழத்தை நல்லெண்ணெயுடன் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். (1310)

 

33.   வெந்தயத்தை செவ்வாழைப் பழத்துடன் சாப்பிட்டால் சீதபேதி சீராகும்.

 

34.   வெந்தயத்தை வறுத்து இடித்து வெல்லம் சேர்த்துப் பிசைந்து நான்கு முறை ( 4 வேளை அல்ல ) சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.  (096)  (689)

 

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )21]

{06-08-2021}

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக