மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 4 ஆகஸ்ட், 2021

முடி - வளர்ச்சி பெருக (Hair Growth)

 

01.   அவுரி இலைச் சாறு, மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மி.லி அளவு எடுத்து 500 மி.லி தேங்காய் எண்ணையில் கலந்து, அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும், 35 கிராம் தான்றிக் காயும் அரைத்துக் கலந்து காய்ச்சிப் பதமுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும். முடி கருத்து தழைத்து வளரும். அத்துடன் பித்தம் தணியும்.

 

02.   உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றில் தலா 25 கிராம் எடுத்து ஒன்றாகச் சேர்த்து, பெண்கள் சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அடையும்..

 

03.   எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையில் கரிசலாங் கண்ணி இலையை அரைத்துப் போட்டு சூரிய ஒளியில் 8 நாள் வைத்திருந்து வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

 

04.   கரிசலாங் கண்ணி இலைச் சாற்றை சம அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து, காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தால், முடி கறுத்து தழைத்து வளரும்.

 

05.   கறிவேப்பிலையை நன்கு அரைத்து, நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் நீண்ட கேசத்தைப் பெறலாம்.

 

06.   கற்றாழைச் சோற்றை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துத் தலை முழுகிவர, முடி நன்கு வளரும், நிம்மதியான நித்திரை வரும்.

 

07.   காரட் சாறு, எலுமிச்சம் பழச் சாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, தினசரி தலைக்குத்தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.(911)

 

08.   கீழாநெல்லி வேரை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலைக்குத் தடவி வந்தால், முடி நன்கு வளரும்.(916)

 

09.   சீயக்காய் அரைக் கிலோ, வெந்தயம் கால் கிலோ, கடுகுதுவரை தலா 50 கிராம், அரைத்துப் பொடித்து, தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். தலைமுடி பொலிவு பெறும்.

 

10.   சீயக்காய்ப் பொடியில் தயிர் சேர்த்துக் கலக்கி, தலையில் தடவி 20 நிமிடம் ஊறியபின், குளிர்ந்த நீரில் அலசி வரலாம். முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

 

11.   செம்பருத்தி இலை பத்து அல்லது 15 இலைகளுடன் ஏழெட்டுப் பூக்களையும் சேர்த்து 200 மி.லி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அவை ஆறியதும், அந்தக் கலவையில் 2 அல்லது 3 தேக்கரண்டி கடலை மாவினைச் சேர்க்கவும். இதுவே செம்பருத்தி ஷாம்பு. இதைப் பயன்படுத்தி வந்தால் தலைமுடி செழுமையுடன் கருமையாக வளரும்.

 

12.   செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலை முடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

 

13.   செம்பருத்தியின் இலை, பூ, வெந்தயம், வெட்டிவேர், ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, தினமும் தடவிவர  உச்சியில் ஏற்படும் வெப்பம் தணிந்து முடி செழுமையாக வளரும்.

 

14.   தான்றிக்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

 

15.   நெல்லி முள்ளியை அரைத்து நன்கு பொடியாக்கி, தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, தலைக்குக் தேய்த்து வந்தால், முடி நன்றாக வளரும்.  (910)

 

16.   மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி காய்ச்சி, வடிகட்டி, தலைக்குத் தேய்த்து வந்தால்,முடி நன்றாக வளரும்.(931) (936)

 

17.   வெந்தயம் ஒரு தேக்கரண்டி எடுத்து  தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஒரு ஜாடியில் அடைத்து மூன்று வாரங்கள் வெயிலில் வைத்து, பின்பு தலைக்குத் தேய்த்துத் தலை வாரி வந்தால், முடி வளர்ச்சி மிகுதியாகும்.

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )19]

{04-08-2021}

==========================================================

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக