மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

மஞ்சள் காமாலை (Jaundice)

 

 

01.  அவரி இலைக் கொட்டைப் பாக்கு. அளவு அரைத்து 250 மி.லி வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிக்கட்டி, அதிகாலையில் மூன்று நாள் கொடுக்க மஞ்சள் காமாலை, அந்திமாலை தீரும்.

 

02.  அவுரி இலை ஒரு பிடி, 2 சிட்டிகை சீரகம், 6 மிளகு ஆகியவற்றைச் சிதைத்து ஒரு  லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி, வேளைக்கு 60  மி.லி வீதம் 4 வேளை கொடுக்க மஞ்சள் காமாலை தீரும்.

 

03.  ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி சேர்த்து அரைத்து 30 கிராம் காலை மட்டும் 3 நாட்கள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குக் கொடுக்க, மஞ்சள் காமாலை தீரும்.

 

04.  கரிசலாங்கண்ணி இலைச் சாறில் வில்வ இலைப்பொடி கலந்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.(1533)

 

05.  கரிசலாங்கண்ணிகள் மஞ்சள், வெள்ளை என இரு வண்ணங்களில் பூக்கும் செடிகள்  உள்ளன. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன.

 

06.  கரிசலாங்கண்ணிச் சாறு முதல் நாள் காலை 10 மி.லி. எனத் தொடங்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 மி.லி என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது. மோரில் சாப்பிடவும்.

 

07.  காரட், பீட்ரூட், அவரைக்காய் வாழைத்தண்டு ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டும், மலச்சிக்கல் இல்லாமல் வைத்துக் கொண்டும் வந்தால் மஞ்சள் காமாலை அணுகாது.(106) (1097)

 

08.  கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, ஒரு கொட்டைப் பாக்கு அளவு காலை மாலை 10 நாட்கள் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை முற்றாகக் குணமாகிவிடும்.(1091)

 

09.  கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு மோரில் கரைத்து காலை மாலை கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.(1086)

 

10.  கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை தும்பை இலை சமன் அரைத்து பெரியோருக்கு புன்னைக் காயளவும்,  இளைஞர்களுக்குக் கழற்சிக் காயளவும், சிறுவர்களுக்குச் சுண்டைக் காயளவும் பாலில் கலந்து பத்து நாள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். காரம் புளி நீக்கி, பால்சோறும் மோர் சோறும் அரை உப்புமாகச் சாப்பிட்டு வந்தால்  காமாலை தீரும்.

 

11.  கீழாநெல்லி செடி நான்கு, ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த விழுதை பால் மோர் ஏதேனும் ஒரு பானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க  காமாலை நிச்சயம் குணமாகும்.

 

12.  கீழாநெல்லி இலை, மருதாணி இலை  இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, இந்த விழுதிலிருந்து 5 கிராம் எடுத்து ஆட்டுப் பாலில் கலந்து  மூன்று வேளைகள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை தீரும். (1096)

 

13.  கீழாநெல்லி வேரை, பச்சையாய் 20 கிராம் எடுத்து அரைத்து, பாலில் கலக்கிக் கொடுக்க மஞ்சள் காமாலை நீங்கும்.

 

14.  கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி (மஞ்சள் பூவுடையது) ,தும்பை இலை, சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

 

15.  கீழாநெல்லிச் செடியை வேருடன் பிடுங்கி, கழுவி, சுத்தம் செய்து அரைத்து, கொட்டைப் பாக்கு அளவுக்கு எடுத்து மோரில் கலக்கி, காலை மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.(436) (1087)

 

16.  கீழாநெல்லிச் செடியைக் கழுவி, சுத்தம் செய்து, அப்படியே மைய அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து மோருடன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.(1095)

 

17.  கீழாநெல்லியின் வேர், இலை ஆகியவற்றை அரைத்து மோரில் கலக்கிக் கொடுக்க, மஞ்சள் காமாலை, மேகநோய்  ஆகியவை போகும்உப்பு நீக்கவும்.

 

18.  குப்பைமேனி ஒரு பிடி, கரிசலாங்கண்ணி ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி என்று இம்மூன்று செடிகளின் இலைகளையும் பறித்துக் கொண்டு வந்து கல்லில் அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு உருண்டை செய்து, அதை மோரில் கரைத்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். காலை மாலை என மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும். புளி, காரம் நீக்கி அரிசிக் கஞ்சியை மோரில் கலக்கிக் கொடுக்கவேண்டும். மருந்து சாப்பிட்டு அரை மணி நேரம் சென்ற பின் தான் ஆகாரம் தர வேண்டும். உப்பு சேர்க்கக் கூடாது. இவ்வாறு செய்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்.

 

19.  கையாந்தரை, தும்பை, அம்மான் பச்சரிசி ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றாக அரைத்து, ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.(1093)

 

20.  கொன்றைப் பூவை, தனியாகவோ, கொழுந்துடன் சேர்த்தோ அரைத்து பாலில் கலக்கி உண்டால் வெள்ளை, வெட்டை, பாண்டு, காமாலை குணமாகும்.

 

21.  சுரைக்காய் பச்சடி செய்து சாப்பிட்டால் கண் குளிர்ச்சி பெறும். மஞ்சள் காமாலை நோயும் குணமாகும்.(1089)

 

22.  தும்பை இலைகளை அரைத்து, தலையில் பற்றுப் போட்டும், அரைத்த கரைசலை 3 நாட்கள் உள்ளுக்கும் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.(1088)

 

23.  தும்பை இலையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து, தலையில் பற்றுப் போட்டால், மஞ்சள் காமாலை குணமாகும்.(1090)

 

24.  தும்பை இலை, கரிசலாங்கண்ணி இலை, கீழாநெல்லி இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு மோரில் கலக்கி காலை மாலை கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை தீரும்.  (1086)

 

25.  தும்பை இலைகளை அரைத்து. அந்த விழுதைத் தலையில் பற்றுப் போட்டும், அரைத்த கரைசலை 3 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட்டும் வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். (1088)

 

26.  தும்பை இலை, வெந்தயம் சேர்த்து அரைத்து தலையில் பற்றுப் போட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். (1090)

 

27.  தும்பை இலை, கையாந்தரை இலை, அம்மான் பச்சரிசி இலை ஆகியவற்றை சம அளவு  எடுத்து அரைத்து, சிறிது தேன் கலந்து எலுமிச்சங்காய் அளவுக்கு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். (1093)

 

28.  நன்னாரி வேர்ச் சூரணம் அரை கிராம் காலை மாலை தேனில் குழைத்துக் கொடுத்தால் மஞ்சள் காமாலை தீரும். அதிகமாகச் சாப்பிட்டால் பசி இராது.

 

29.  நன்னாரி வேர்ப் பொடி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை, பாண்டு ஆகியவை தீரும்.  (1481)

 

30.  நெல்லித் தைலம் வாரம் 2 முறைத் தலையில் வைத்து, தலை முழுகி வந்தால், மஞ்சள் காமாலை தீரும்.

 

31.  பூவரச மரத்தின் பழுப்பு இலையில் இரும்புச் சத்து நிரம்ப உள்ளது. பழுப்பு இலை 2 எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால், மஞ்சள் காமாலை தீரும்.

 

32.  மணித் தக்காளி  இலைச் சாறுடன் பசும்பால்  சேர்த்து காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால், மஞ்சள் காமாலை சீராகும்.

 

33.  மருதம் பட்டைச் சூரணத்துடன் மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சூரணம் சமனளவு கலந்து 3 விரல் அளவு காலை மாலை தேனில் கலந்து உண்ண, மஞ்சள் காமாலை தீரும்.

 

34.  மருதாணி இலையையும், கீழாநெல்லி இலையையும் சமமாக எடுத்து அரைத்து, ஆட்டுப் பாலில் கலந்து மூன்று வேளை ஐந்து கிராம் வீதம் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.(1096)

 

35.  மூக்கிரட்டை இலையைப் பொரியல் அல்லது துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலைத் தீரும்.

 

36.  மூக்கிரட்டை வேர், அறுகம்புல். மிளகு, கீழாநெல்லி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து கசாயம் செய்து காலை மாலை சாப்பிட்டு வந்தால்  மஞ்சள் காமாலை தீரும்.  (1599)

 

37.  மூக்கிரட்டை வேர் 50 கிராம், அறுகம் புல் 30 கிராம், கீழாநெல்லி 30 கிராம், மிளகு 10 எண்ணிக்கை  எடுத்து, சிதைத்து, அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை தீரும்.

 

38.  மூக்கிரட்டை வேர் 50 கிராம், மிளகு 4 எண்ணிக்கை,  உத்தாமணிச் சாறு 50 மி.லி ஆகியவற்றை 100 மி.லி விளக்கெண்ணெயில் காய்ச்சி வாரம் 2 முறை கொடுக்க, குழந்தைகளுக்குக் காணும் மஞ்சள் காமாலை தீரும். 6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி அளவும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 மி.லி அளவும் கொடுக்க வேண்டும்.

 

39.  மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம் புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீரேற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு, மகோதரம் தீரும்.

 

40.  வாழைப் பழத்தின் தோல்மீது [ பழுத்த பழம் ] சுண்ணாம்பு தடவி, இரவு முழுவதும் பனியில் வைத்திருந்து காலையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். (1094)

 

41.  வில்வ இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி கரிசலாங்கண்ணிச் சாறு சேர்த்துக் கலந்து கொடுக்க மஞ்சள் காமாலை விரைவில் தீரும்.

 

42.  வில்வ இலைப் பொடியும் கரிசலாங்கண்ணிச் சாறும் கலந்து ஒரு தேக்கரண்டி கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.  (1533)

 

43.  வேப்பங் கொழுந்து இலையை நிழலில் உலர்த்தி, அரைப் பங்கு உப்பு, ஓமம் சேர்த்து வறுத்து அரைத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமலை குணமாகும்.(1092)

 

44.  வேப்பங்கொழுந்து, முதிர்ச்சியான இலை, ஆகிய இவ்விரண்டையும் இடித்து, அப்பொடியின் அளவிற்கு அரைப்பங்கு ஓமமும் உப்பும் சேர்த்துப் பொடித்து, புசிக்கத் தொடங்கின், அதனால், கண்ணிலிருக்கும் படல மறைப்பு, காமாலை, மாலைக்கண், புழு வெட்டு முதலிய நோய்கள் அகலும்.

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,கடகம் (ஆடி )16]

{01-08-2021}

==========================================================

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக