01.
தழுதாழை இலைச் சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மண்டைக் குடைச்சல், மூக்கில் நீர் வடிதல், தும்மல், சளி சிறிது சிறிதாகக் குறையும்
02. தேவையான அளவு செண்பக இலையைக் கொண்டுவந்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, இரண்டு தேக்கரண்டியளவு நெய்யை அதில் விட்டு காய்ந்தவுடன் இலையைப் போட்டு,நன்றாக அதாவது இலை மிருதுவாகும்படி வதக்கி உச்சியில் கனமாக வைத்துக் கட்டி வந்தால் மண்டைக் குத்து குணமாகும். காலை மாலை புதிய இலையை வதக்கிக் கட்ட வேண்டும். மூன்று நாளில் குணம் தெரியும்.
03. நொச்சி இலை அடைத்த தலையணையில் தலை வைத்துப் படுத்தால் மண்டைக் குடைச்சல் தீரும். (414) (2000)
04. வில்வ இலைப் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் மண்டைக் குடைச்சல் குணமாகும். (1531)
=======================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,கடகம் (ஆடி )16]
{01-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக