01. அகத்திக் கீரையை வேக வைத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் கடுமையான வயிற்று வலி கூடக் குணமாகும்.(703)
02. ஆடாதொடை இலை 100 கிராம், சங்கிலை 100 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாகக் காய்ச்சி, குடித்து வந்தால், வயிற்று வலி தீரும்.
03. ஆடாதொடை இலை, சங்கிலை சம அளவு எடுத்து நீரிலிட்டு சுண்டக் காய்ச்சி காலை மாலை பருகி வந்தால் வயிற்று வலி குணமாகும். (731)
04. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணையில் வதக்கி தொப்புளில் வைத்துக் கட்டினால், சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.(676)
05. இளநீர் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரவில் கண் விழித்து நெடுநேரம் வேலை செய்பவர்களின் வயிற்று வலி 8 நாட்களில் தீரும்.(727)
06. ஏலக்காய், கிராம்பு, சீரகம், சுக்கு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் எடுத்து தேனில் குழைத்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி குணமாகும்.
07. ஏலக்காய்ப் பொடியைத் தேனில் குழைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி குணமாகும். வயிற்றுப் பொருமல், அஜீரணம் ஆகியவையும் குணமாகும்.(671)
08. ஓமவல்லி இலை, துளசி இலை, புதினா இலை, ஓமம் ஆகியவற்றை எடுத்து சற்று இடித்து, தண்ணீர் சேர்த்து கசாயம் செய்து 60 – 100 மி.லி அளவுக்கு பருகினால் வயிற்று வலி, செரியாமை நீங்கும்.
09. கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு சேர்த்துப் பொடி செய்து மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.(645)
10.
கடுகைப் பொடித்து, வெந்நீரில் கலந்து பருகி வந்தால், வயிற்று வலி, விக்கல் ஆகியவை நீங்கும்.
11. கழற்சிக்காய்ப் பருப்புடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து அரைத்து மோருடன் கலந்து குடிக்கலாம். வயிற்று வலி, வயிற்றுப் புண் அகலும்.
12. கிராம்புப் பொடி அரை கிராம் எடுத்து பனை வெல்லத்துடன் சேர்த்து மாதவிடாய்க் காலத்தில் உள்ளுக்குச் சாப்பிட்டால் உதிரச் சிக்கலால் ஏற்படும் வயிற்று வலி தீரும்.(635)
13. குறிஞ்சிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். கீரையை நிழலில் உலர்த்தி அரைத்து, பொடியாகவும் சாப்பிடலாம்.(682)
14. கேழ்வரகுப் புல் (தாள்) எடுத்து அரிந்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். அத்துடன் சிறிது சீரகப் பொடி, சிறிது மிளகுப் பொடி சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி 3 வேளைகள் அருந்தினால் சுரம் நீங்கும். வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, வயிற்று உப்புசம் ஆகியவை விலகும்.
15. கொன்றைப் பூவைக் குடிநீரிட்டு உட்கொள்ள, வயிற்று வலி, குடலைப் பற்றிய நோய்கள் குணமாகும்
16. சதகுப்பை விதைகளை நசுக்கி கொதிக்கும் நீரில் போட்டு 4 மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டிக் குடித்து வந்தால், வயிற்று வலி கட்டுப்படும்.
.
17. சதகுப்பை, ரோஜா மொட்டு, ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து ஒரு பாத்திரத்தில் இட்டு 200 மி.லி வெந்நீர் ஊற்றி மூடி, ஊறவிடவும். மூன்று மணி நேரம் கழித்து வடிகட்டி, பெரியவர்கள் ஒரு அவுன்ஸ், குழந்தைகள் கால் அவுன்ஸ் அருந்தினால் வெப்பத்தால் உண்டாகும் வயிற்று வலி அகலும்.
18. சத்திச் சாரணை இலைச் சாறினைப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வீக்கம், வயிற்று வலி தீரும்.(1719)
19.
சர்பகந்தி வேரினைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நீர் விட்டுக் கொதிக்க வைத்து தினசரி 2 வேளை சாப்பிட்டு வந்தால் அடிவயிற்று வலி சரியாகும்.(662)
20. சீரகத் தூள் ஒரு தேக்கரண்டி, வெந்தயத் தூள் ஒரு தேக்கரண்டி இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதில் ஒரு தேக்கரண்டி மட்டும் எடுத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
21. சீரகத்தை நன்கு வறுத்து ஒரு தம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து மாதவிடாய்க் காலங்களில் கொடுத்தால், வயிற்று வலி சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.
22. சுக்குத் தூளோடு சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.
23.
செண்பக மரத்தின் இலையைக் கொண்டு வந்து இடித்து சாறு எடுத்துத் துணியில் வடிகட்டி, அதில் 3 தேக்கரண்டியளவும், இரண்டு தேக்கரண்டியளவு தேனும் சேர்த்துக் கொடுத்து வந்தால் எந்த வகையான வயிற்று வலியானாலும் அது குணமாகும்.
24. திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கை சம அளவாக எடுத்து, வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிடுங்கள். நீர்க்கோவை, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சீராகும்.
25. நொச்சி வேரைக் குடிநீர் செய்து கொடுத்தால் வளியை (வாதம்) போக்கி நீர்ப்பை அழற்சியை நீக்கும். இதை வயிற்று வலி, வயிற்றுப்புழு நோய் முதலிய நோய்களுக்கும் கொடுக்கலாம்.
26. பெருங்காயத்தை அரை கிராம் எடுத்து பொரித்து வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் குணமாகும்.(734)
27. மருத மர இலைகளைப் பறித்து அரைத்து ஒரு கிராம் எடுத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, பித்த வெடிப்பு ஆகியவை குணமாகும்.
(1480)
28. மாசிக்காய்ப் பொடி, தேன் இரண்டையும் தலா அரைத் தேக்கரண்டி எடுத்து கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப் போக்கு, தீராத வயிற்று வலி ஆகியவை சீராகும்.
29. மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில் சுட்டுக் கரியாக்கி அந்தத் தூளைக் கோதுமைக் கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும்.(692)
30. வசம்பைக் கரித்துப் பொடியாக்கி 100 மி.லி தாய்ப் பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.(582) (673)
31. வடித்த கஞ்சியில் வெந்தயத் தூள் ஒரு தேக்கரண்டி, பனங் கற்கண்டு 2 தேக்கரண்டி சேர்த்துக் கலக்கிக் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.(656)
32. வில்வ வேரைப் பறித்து, சுத்தம் செய்து மை போல் அரைத்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும். வாந்தி குணமாகும். நீர்க்கடுப்பும் குணமாகும்.(709)
33. வெங்காயத்தை உப்பில் தொட்டு தின்று வந்தால் இரத்த வாந்தி நிற்கும். (292) (1281) வயிற்று வலி நிற்கும்.
(1587)
34. வெந்தயத்தை வறுத்துப் பொடியாக்கி மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி தீரும்.
.
35. வெந்தயம் 100 கிராம் எடுத்து வறுத்து, பொடித்து 200 கிராம் வெல்லம் சேர்த்து உண்டால் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி குறையும்
36. வெந்தயப் பொடி ஒரு தேக்கரண்டி, பனங்கற்கண்டு இரண்டு தேக்கரண்டி எடுத்து வடித்த கஞ்சியுடன் கலந்து குடித்தால் வயிற்று வலி உடனே குணமாகும்.
(656)
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01).அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவஅதிகாரி, டாக்டர். வெ .ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்
2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப்
பெற்றவை !
(03).அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]
{01-09-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக