மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

விஷக்கடி - பாம்புக்கடி (Snake Bite)

 

01.   ஆடுதீண்டாப்பாளையின் வேரினை எடுத்துக் கழாயம் செய்து குடித்தால் பாம்புகடி  விஷம் முறியும். (893)

 

02.   எருக்கஞ் செடியின் பிஞ்சு இலைகள் 2 அல்லது 3 எடுத்து மென்று தின்றால் பாம்புக் கடி விஷம் இறங்கிவிடும்.(880)

 

03.   எருக்கஞ் செடியின் வேரைப் பறித்து மைபோல் அரைத்து பாம்புக் கடிவாயின் மேல் போடவேண்டும். பாம்பு கடி விஷம் நீங்கும்.(867)

 

04.   கரிசலாங்கண்ணி இலையை இடித்துச் சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ்    ( 30 மி.லி )   மோரில்   கலந்து   குடித்தால்   பாம்புக் கடி விஷம் இறங்கும். (870)

 

05.   கிரந்திநாயகம் செடியின் இலைகளை எடுத்து மென்று தின்றால் தேள் விஷம், பாம்பு விஷம் ஆகியவை  முறியும். இலையை அரைத்துக் கடிவாயிலும் கட்ட வேண்டும். (888)

 

06.   தும்பை இலைச் சாறு உட்கொண்டால் தேள்கடி விஷம், பாம்புக்கடி விஷம் அகியவை நீங்கும்.(900)

 

07.   நஞ்சறுப்பான் கொடி இலையை அரைத்துக் கடிவாயில் கட்டி சிறிதளவு உள்ளுக்கும் கொடுத்தால் பாம்புக் கடி  நஞ்சு முறியும்.(906)

 

08.   பிரமதண்டு சமூலம் ( வேருடன் பிடுங்கிய முழுச் செடி ) எடுத்து அரைத்து 30 கிராம் அளவுக்கு  உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். பாம்புக் கடி, கடிவாயிலும் வைத்துக் கட்ட வேண்டும். விஷம் முறிவடையும்.(883)

 

09.   வாழை மரத்தின் முற்றிய மரம்) அடி வாழைத் தண்டின் சாறு 100 மி.லி எடுத்து அதனுடன் தும்பைப் இலைச் சாறு 100 மி.லி சேர்த்து கலக்கிச் சாப்பிட்டால் பாம்பு விஷம் முறியும்.(899)

 

10.   வாழைப் பட்டைச் சாற்றை அருந்த வைத்தால் பாம்பு விஷம் முறியும். (வாழை காண்க)

 ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)18]

{03-09-2021}

==========================================================================

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக