01. இஞ்சி, வெள்ளைப் பூண்டு இரண்டின் சாறையும் எடுத்து தேன் கலந்து கொடுத்தால் வாந்தி உடனே நிற்கும்.(294)
02. இஞ்சிச் சாறுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து பருகி வந்தால் வாந்தி உடனே நிற்கும்.(101)
03. இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு வகைக்கு 30 மி.லி எடுத்து 15 மி.லி தேன் கலந்து ஒருதடவைக்கு 15 மி.லி அளவாக அடிக்கடிக் கொடுத்து வந்தால், ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம், தீரும். வெங்காயச்சாற்றுக்குப் பதிலாக எலுமிச்சைச் சாற்றையும் பயன்படுத்தலாம்.
04. ஏலக்காய் 15, வால் மிளகு 15, வெற்றிலை 3 ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மூன்று வேளை பருகினாலும் வாந்தி, குமட்டல் நின்று விடும்.
05. ஏலக்காய், அதிமதுரம், மிளகு சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை வடிகட்டிக் குடித்தால் வாந்தி, குமட்டல் நீங்கும்.
06. ஏலக்காய்ப் பொடியுடன் துளசிச் சாறு கலந்து பருகினால் வாந்தி நிற்கும்.
07. கர்ப்பகால வாந்திக்கு இலவங்கப் பொடியை நீரில் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிப் பருகினால் வாந்தி நிற்கும்.
(282)
08. கறிவேப்பிலை ஈர்க்குடன் வேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு ஆகியவற்றைச் சேர்த்து, இடித்து, நீர் விட்டுக் காய்ச்சிக் கொடுக்க , வாந்தி உடனே நிற்கும்.
09. கறிவேப்பிலையை சிறிதளவு அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று உப்புசம் விலகும். குமட்டல் நிற்கும். வாந்தி உடனே நிற்கும்.
10. கோரைக் கிழங்குடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வேளைக்கு 60 மி.லி வீதம் அருந்தினால் தொடர் வாந்தி நிற்கும்
11. சுக்குடன் சேர்த்து சிறிது துளசி இலையைச் சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் ஆகியவை நிற்கும்.
12. திருநீற்றுப்
பச்சிலைச் சாற்றுடன் வெந்நீர் கலந்து அருந்தி வர, நாட்பட்ட வாந்தி குறையும்.
13. துளசிச் சாறு கற்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுத்து வந்தால் வாந்தி இருப்பின் சரியாகும்.(281)
14. நாரத்தங்காய் இலையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, பித்தக் கோளாறுகள் நீங்கும்.(286)
15. பிரண்டை உப்பு 20 மி.கி எடுத்து பாலில் கலந்து 3 வேளைகள் கொடுத்தால் வாந்தி நிற்கும்.(296)
16. பிரயாணத்தின் போது வாந்தி வருகிறதா, தினசரி ஒரு நெல்லிக் காய் வீதம் 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இப்படிப்பட்ட தொந்தரவு மறைந்து விடும்.(285) (1118)
17. புதினா கீரையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், மசக்கை மயக்க்ம், வாந்தி சரியாகும்.(289)
18. பூண்டுப் பல் சாறு, இஞ்சிச் சாறு இரண்டும் கலந்து 15 மி.லி உள்ளுக்குக் கொடுத்தால் தீராத வாந்தியும் நிற்கும். (294)
19. மந்தாரை இலையுடன் கொத்துமல்லித் தழை, இஞ்சி, உளுந்து, உப்பு, புளி, மிளகாய் சேர்த்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் வாந்தி சரியாகும்.(295)
20. முசுமுசுக்கை வேரை உலர்த்திப் பொடியாக்கி அல்லது குடி நீர் செய்து கொடுக்க வாந்தி, மார்பு நோய் முதலியன நீங்கும்.
21. வசம்புச் சாம்பலை [ சுட்ட வசம்புச் சாம்பல் ] தேனில் குழைத்து நாக்கில் தடவினால் வாந்தி உணர்வு கட்டுப் படும்.
22. வில்வ வேரைக் கொண்டுவந்து சுத்தம் செய்து மை போல் அரைத்துப் பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, வயிற்று வலி, நீர்க்கடுப்பு ஆகியவை குணமாகும்.(709)
23. விளாம் பழத்துடன் பனங்கற் கண்டைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் ஆகியவை நிற்கும்.
24. வெங்காயச் சாறு 15 மி.லி. எடுத்து காலை மாலை 4 நாட்கள் கொடுத்துவந்தால், வாந்தி, கப வாந்தி ஆகியவை நிற்கும்.(1199)
25. வெங்காயச் சாறும் இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து பருகி வந்தால் வாந்தி உடனே நிற்கும்.
(101)
26. வெங்காயச் சாறு அரை அவுன்ஸ் (15 மி.லி.) எடுத்து காலை, மாலை நான்கு நாள் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குணமாகும். (1183)
வாந்தி, கப வாந்தி ஆகியவை தீரும்.
(1199)
27. வேப்பம் பூவை [ நாட்பட்ட பழைய வேப்பம் பூவை ] நெய்
விட்டு வதக்கி, உப்பு, சுட்ட
பழம் புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலைக் கூட்டி, துவையல் செய்வது
போலச் செய்து சோற்றுடன் கலந்துண்ண, பெருமூர்ச்சை, நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, நீடித்த வாத
நோய், ஏப்பம், வயிற்றுப்
புழு ஆகியவை போகும்.
28. வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி உடனே நிற்கும்.
(280) (283) (1121)
====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01).அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ
அதிகாரி, டாக்டர். வெ .ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப்
பெற்றவை !
(03).அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]
{01-09-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக