01. ஆரஞ்சுப் பழத் தோலை எடுத்து நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து கசாயமாக்கி 50 மி.லி அளவுக்குக் குடித்து வந்தால் வாயுத் தொல்லைகள் நீங்கும்.(1724)
02. ஏலப் பொடியை அரைத் தேக்கரண்டி எடுத்து அரைத் தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, உணவு சாப்பிடுவதற்கு முன் அருந்துங்கள். வாயுத் தொல்லை நீங்கும்.
03. கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். நீர்க் கோவை இருந்தாலும் விலகும்.(324)
04. குப்பை மேனி இலையைக் காய வைத்துப் பொடி செய்து, மாலையில் மட்டும் அரைக் கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட வாயுத் தொல்லை, அஜீரணம் ஆகியவை நீங்கும்.. (652)
05. சிற்றரத்தைப் பொடி ஒரு கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். சுரம், சளி, ஈளை, இருமல், தொண்டைப் புண், நீர்க்கோவை ஆகியவை இருந்தாலும் அவை நீங்கும்.(120)
06. சுக்கான் கீரையைப் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு கட்டுப்படும்.(1145)
07. சுக்கினை உணவுடன் சேர்த்து வந்தால், வாயுக் கோளாறுகள் வராவே வராது. வாயுக் கோளாறு இருந்தால் நீங்கும்.
08. சுக்குடன் சிறிதளவு வெற்றிலை சேர்த்துச் சாப்பிட்டாலும் வாயுத் தொல்லைகள் நீங்கும்.
09. தான்றிக் காய், திப்பிலி இரண்டையும் பாலில் ஊற வைத்து உலர்த்தவும். மிளகு மற்றும் தோல் நீக்கிய சுக்கை மிதமாக வறுக்கவும். இவை அனைத்தையும் இடித்து தூளாக்கிச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
10. திருநீற்றுப் பச்சிலைச் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் மேல் மூச்சு வாங்குதல், இருமல் ஆகியவை தீரும். (1381) வயிற்று வாயு தீரும் (1407)
11. நாய் வேளை இலையைச் சமைத்து உணவுடன் உண்டு வந்தால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.(678)
12. பெருங்காயம் வாயுவை நீக்கும். உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் உள்ள நஞ்சை முறிக்க வல்லது.(767)
13. மிளகை
நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர தொண்டைக்
கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்கும். நல்ல
பலன் தரும்.
14. முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து இரசம் வைத்து உண்டு வந்தால் மலச் சிக்கல், வாயு ஆகியவை தீரும்.
(380) (1521) (1558)
15. மோருடன் சீரகம், இஞ்சி, உப்பு சேர்த்துப் பருகி வந்தால், வாயுத் தொல்லை நீங்கும்..
16. வாதநாராயணன் இலையைக் காய வைத்து, இடித்துத் தூளாக்கி, ஐந்து கிராம் எடுத்து, சுடுநீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.(326)
17. விளா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து வந்து கழாயம் வைத்துச் சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும். நல்ல பசி எடுக்கும்.(669)
18. விளாமர இலைகளைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடித்து வந்தால், வாயுத் தொல்லை நீங்கும்.
19. விளாமரக் கொழுந்தினைப் பறித்து வந்து நீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கசாயம் செய்து அருந்தினால் வாயுத் தொல்லை நீங்கும்.
(1312)
20. வெந்தயக் கீரையைக் கூட்டு வைத்து பகலில் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை தீரும்.
21. வெந்தயத்தை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுங்கள். இதயம் மேம்படும். புற்று நோய், கல்லீரல் பாதிப்புகளை நீக்கும். மூட்டு வலியைக் குறைக்கும். உடல் குளிர்ச்சி அடைந்து, சூடு தடுக்கப்படும். எடை குறையும். செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல், குடல் புண் (அல்சர்) வராமல் தடுக்கும்.
22. வெந்தயம் சிறிதளவு, சீரகம் இரண்டையும் எடுத்து பொடித்து ஒரு தம்ளர் மோரில் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை குறையும்.
23. வெள்ளரி விதையின் உட்பருப்பைப் பொடித்து தினமும் அரைத் தேக்கரண்டி அளவுக்கு நீரில் கலந்து அருந்தினால் புண்மம், வாயுத் தொல்லை, வயிற்றெரிச்சல்
தீரும்.
24. வெள்ளைப் பூண்டைப் பசும் பாலில் வேக வைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை தீரும்.(668)
25. வேப்பம் பூ வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு மிக நல்லது. வேப்பம் பூவை மென்று தின்பார்கள்..
===================================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில்,
S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)17]
{02-09-2021}
=====================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக