மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “த” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “த” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜூலை, 2021

தோல் - தேமல் (Chiloasma)

 

01.   எலுமிச்சங் காய்கள் இரண்டு எடுத்துச் சாறு பிழிந்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்துக் கலக்கி அதை ஒரு விரலால் தொட்டு தேமலின் மேல் பூச வேண்டும் நாள்தோறும் மூன்று வேளை வீதம் பன்னிர்ண்டு நாள் இவ்வாறு செய்து வந்தால் தேமல் குணமாகி விடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

02.   கமலா ஆரஞ்சுத் தோலை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து தினமும் உடம்பிற்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தேமல் நீங்கிவிடும்.(1001)

 

03.   கொன்றைப் பூவை எலுமிச்சம்பழச் சாறு விட்டு அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால், தேமல், சொறி, கரப்பான் ஆகியவை நீங்கும். பூவைக் குடிநீரிட்டு உட்கொள்ள, வயிற்று வலி, குடலைப் பற்றிய நோய்கள் குணமாகும்.

 

04.   சாதிக் காயுடன் நாயுருவி இலைகளை எடுத்து மை போல் அரைத்து தேமலின் மேல் தடவி வந்தால் தேமல்கள் மறையும்.(1009)

 

05.   திப்பிலிப் பொடி அரை தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் சப்பிட்டு வந்தால் தேமல் நீங்கும்.

 

06.   துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து தேமல், படை மீது பூசி வந்தால், அவை விரைவில் நீங்கும்.

 

07.   நாயுருவி இலைச்சாற்றைத் தடவி வந்தால் தேமல், படை முதலியவை நீங்கும்.

 

08.   நாயுருவி இலையுடன் ஜாதிக் காய் சேர்த்து  மைபோல் அரைத்து தேமல் மீது  தடவி வந்தால், தேமல் மறைந்து விடும்.(1009)

 

09.   பூவரசங் காயை எடுத்துக் கல்லின் மேல் உரசினால் மஞ்சள் நிறத்தில் பால் வரும். அந்தப் பாலை விரலால் தொட்டு தேமலின் மேல் பூச வேண்டும். இவ்வாறு பத்து நாள் காலை, மதியம், மாலை என தினமும் மூன்று வேளைகள் தொடர்ந்து செய்தால் தேமல் அடியோடு மறைந்து விடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

10.   மணித்தக்காளி இலைச் சாறை தேமல், சொறி, சிரங்கு, புண்கள் மேல் தடவி வரலாம். நிவாரணம் தரும். மணித் தக்காளி இலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொண்டால், உடல் பருக்கும்.

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================


தோல் - சொறி, சிரங்கு (Scabies)

01.  அவரைக் காய் சாறினைத் தொடர்ந்து சொறி சிரங்கின் மீது பூசி வந்தால், அவை மெல்ல மறைந்து போகும்.(458)

 

02.  அறுகம் புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை  ஆகியவை போகும்.

 

03.  அறுகம்புல் தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும். (466)

 

04.  அறுகம்புல் தைலம் எடுத்து உடல் முழுதும் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி சிரங்கு விலகிவிடும்.(2019)

 

05.  எழுத்தாணிப் பூண்டின் இலைகளை இடித்துச் சாறெடுத்து சம அளவு எள் எண்ணெய் சேர்த்து, காய்ச்சி, வடிகட்டி தினமும் காலை மாலை சொறி, சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை நீங்கிடும். (1715)

 

06.  எழுத்தாணிப் பூண்டின் இலைச் சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி தொடை இடுக்கு மற்றும்  விரல் இடுக்குகளில் தோன்றும் சொறி, சிரங்குகளுக்கு பாதிக்கப் பட்ட இடங்களில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின்பு  அரப்புத் தூள் அல்லது சீயக்காய்த் தூள் கொண்டு குளித்து வர  வேண்டும்.

 

07.  கல்யாண முருங்கை இலைச் சாறு, தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு தீரும்.

 

08.  காட்டாமணக்கு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சொறி சிரங்கின் மீது பூசி வந்தால், சொறி சிரங்கு காணாமற் போய் விடும்.(462)

 

09.  கீழாநெல்லி இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக் குளித்து வந்தால் சொறி சிரங்கு, நமைச்சல் தீரும்.

 

10.  கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு சில முறை செய்து வந்தால், சொறி சிரங்கு குணமாகும். (486)

 

11.  கீழாநெல்லியின் இளங்கொழுந்தை எடுத்து  குடிநீர் செய்து சீதக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம். இலையை உப்பு சேர்த்து அரைத்து சொறி சிரங்குகளுக்குப் பூசலாம் உப்பில்லாமல் அரைத்து சதைச் சிதைவுக்குப் பற்றிடலாம்.

 

12.  குப்பை மேனிச் சாறினைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.(441)

 

13.  கொன்றைப் பூவை எலுமிச்சம்பழச் சாறு விட்டு அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால், தேமல், சொறி, கரப்பான் ஆகியவை நீங்கும். பூவைக் குடிநீரிட்டு உட்கொள்ள, வயிற்று வலி, குடலைப் பற்றிய நோய்கள் குணமாகும்.

 

14.  கொன்றை மரத்தின் வேரை எடுத்து வந்து சுத்தம் செய்து நீர் விட்டுக் கசாயம்   செய்து  50  மி.லி அளவுக்குக் குடித்து  வந்தால்  மேக  ரணம் ( நீரிழிவுப் புண் ) தீரும்.(1314) சொறி சிரங்கு நீங்கும் (1886)

 

15.  கோவை இலைச் சாறினைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வந்தால் சொறி சிரங்கு காணாமற் போய்விடும். (434)

 

16.  சடைச்சி வேரை எடுத்து சுத்தம் செய்து மை போல் அரைத்துப் பூசினால் சொறி சிரங்கு குணமாகும்.(1811)

17.  சிவனார் வேம்பு இலைகளை உலர்த்தி சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்துத் தடவி வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.(1723)

18.  சிறியாநங்கைத் தூள் ஒரு தேக்கரண்டி எடுத்து காலை மாலை தண்ணீரில் கலக்கிக் குடித்து வர வேண்டும். 15 நள் சாப்பிட்டால் போதும். சொறி விலகிவிடும். (ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல் பக்கம் 122)

19.  சிறுதேட் கொடுக்கு இலைச் சாறு எடுத்துப் பூசி, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு சில தடவைகள் செய்தால் சொறி சிரங்கு காணாமற் போகும்.(889)

 

20.  துளசி இலைச் சாறு சரும நோய்களுக்கு சிறந்த நிவாரணி. துளசி இலையுடன் எலுமிச்சம் பழச் சாறு கலந்து அரைத்து சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்குப் பற்றுப் போடலாம்.

 

21.  துளசி இலையை எலுமிச்சம் பழச் சாறுடன் அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் படை, சொறி நீங்கும்.

22.  நன்னாரி வேரைச் சிதைத்து ஒரு நாள் ஊற வைத்து, அந்த நீரைக் குடித்து வந்தால் சொறி சிரங்கு, மேக நோய் தீரும்.  (1410)

23.  நிலவேம்பு முழுத் தாவரத்தையும் நிழலில் உலர்த்தி, பொடிசெய்து குழைத்து உடலில்பூசி 15 நிமிடங்கள் வைத்திருந்து குளித்தால் வண்டுக்கடி, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

 

24.  நிலாவாரை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிய பின்னர் பாதிக்கப் பட்ட இடத்தைக்  கழுவி வந்தால் சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.

25.  பிரமதண்டு இலைச் சாறு (பால்) 10 மி.லி எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.  (1474)

26.  புன்னை இலைகளைப் பறித்து வந்து நீரில் ஊற வைக்க வேண்டும். நான்கு மணி நேரம் கழித்து அந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால், சொறி சிரங்கு, மேகரணம் யாவையும் நீங்கிவிடும்.(457) (1483)

27.  புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை நிழலில் உலர்த்தி அரைத்துச் சூரணம் (பொடி) செய்து தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம், மேகம் ஆகியவை குணமாகும்.

28.  பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை எடுத்து, வெயிலில் காய வைத்து தேங்காய் எண்ணெய்யில்  குழைத்துப் பூசி வந்தால் சொறி சிரங்கு நீங்கிவிடும்.(454)

29.  பூவரசு பழுப்பு இலைகளை வெயிலில்காய வைத்து கருக்கி அந்த சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவினால் ஊரல், அரிப்பு ஆகியவை குணமாகும்.  (1493) சொறி சிரங்கு குணமாகும்.  (1502) (454)

30.  பொன்னாவாரை இலைகளுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடம்பில் பூசிக் குளித்து வந்தால் சொறி சிரங்கு சரியாகிவிடும்.(456)

 

31.  மணித்தக்காளி இலைச் சாறை தேமல், சொறி, சிரங்கு, புண்கள் மேல் தடவி வரலாம். நிவாரணம் தரும். மணித் தக்காளி இலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொண்டால், உடல் பருக்கும்.

 

32.  முருங்கைப் பட்டை சாற்றுடன், குப்பை மேனிச் சாறும் சேர்த்து, சமபங்கு தேங்காய் எண்ணெயும் சேர்த்து, சொறி, சிரங்குகளின் மீது தடவினால் அவை குணமாகும்.

 

33.  வசம்புத் தூளை தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, சிவக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, பிறகு இறக்கி ஆற வைத்து வடிகட்டி சிரங்கு மீது தடவி வந்தால் சொறி சிரங்கு மறைந்துவிடும்.(173)

34.  வெள்ளருகு சமூலம் எடுத்து சுத்தம் செய்து அரைத்து வெந்நீரில் கலந்து உடல் முழுதும் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் சிரங்கு, ஊறல் குணமாகும். (1589)

35.  வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும்,

 

36.  வேப்பிலையுடன் சிறிது தேனும் மஞ்சளும் சேர்த்து அரைத்துத் துணியில் தடவி மேலுக்குப் போட கரப்பான், சொறி சிரங்கு, அம்மைப்புண்  இவைகள் நீங்கும். எரிச்சல் இருந்தால் அரிசி மாவு கூட்டிக் கொள்ளலாம்.


37.  வேப்பிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்து உடம்பு முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் சொறி சிரங்கு நீங்கிவிடும்.(455)


======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

======================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

======================================================