மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “த” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “த” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜூலை, 2021

தோல் - படர் தாமரை (Lichen)

01.   அறுகம் புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை  ஆகியவை போகும்.

02.   எலுமிச்சம் பழச் சாற்றில் சந்தனக் கட்டையை உரைத்து, குழம்பினை படர் தாமரை மீது பூசி, நன்கு உலர்ந்த பின் கழுவி வந்தால் குணமாகும்.

03.   கொன்றை இலையைத் துவையல் செய்து சோற்றுடன் கலந்து உண்ண மலம் கழியும். இலையை அரைத்து படர் தாமரைக்குப் பூசலாம்.

04.   சந்தனக் கட்டையை  எலுமிச்சம்பழச் சாற்றில் உரசி, அந்தத் தேய்வை, தடவி வந்தால், முகப் பருக்கள், படர் தாமரை ஆகியவை  நாளடைவில் மறைந்துவிடும்,(853)

05.   பவளமல்லி  இலையை அரைத்துப் பூசி வந்தால் படர் தாமரை விலகும்.

06.   பூவரசங் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் பால் வரும். இந்தப் பாலை எடுத்து படர் தாமரை மேல் தடவி வந்தால், விரைவில் குணமாகும்.  (1495)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================

தோல் - நோய்கள் (skin Diseases)

01.   ஆவாரம் பூவை உலர்த்தி, பூலாங்கிழங்கு மாவுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள்  குணமாகும்.

02.   எருமைத் தக்காளி இலைகளை அரைத்து பசையாக்கி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் நோய்கள் நீங்கும்.

03.   கருஞ் செம்பை இலையுடன் குப்பைமேனி இலைகளைச் சேர்த்து அரைத்துக் கலக்கி தடவி  நன்கு காய்ந்த பின் குளித்து வந்தால் தோல் வியாதி, படை ஆகியவை குணமாகும்.(1032)

04.   குப்பை மேனி இலையுடன் சிறிது மஞ்சள், உப்பு ஆகியவை சேர்த்து  அரைத்து உடலில் பூசி, ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.(1000)

05.   சிரட்டைத் தைலம் தோல் வியாதிக்கு மிக அருமையான மருந்து. (994)(1772)

06.   செம்மண் பற்று உடல் முழுதும் இட்டு, 2 மணி நேரம் காலை வெயிலில் காய்ந்து, பிறகு குளித்து வந்தால் தோல் நோய்கள் அகலும். (1022)

07.   தகரைச் செடியின் வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்துப் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும் .(993)

08.   தக்காளிக் காயை உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் வீக்கம், தோல் நோய் ஆகியவை குணமாகும். (1993)

09.   தாளிசாதி சூரணம் 100 கிராம், மற்றும் அமுக்கிரா கிழங்கு சூரணம் 100 கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படும் .(555)

10.   நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து  30 கிராம் சீரகம் பொடித்துப் போட்டு, நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலை - உடல் சூடு, தோல் நோய்கள் மறையும்.

11.   பவளமல்லி விதையைப் பொடித்து அரைத் தேக்கரண்டி தேனுடன் சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் அண்டாது.

12.   பூவரசங் காயிலிருந்து  உண்டாகும் ஒரு வித மஞ்சள் நிறமுள்ள பாலைத் தோலில் உண்டாகும் நோய்களுக்குத் தடவலாம்.

.

13.   பூவரசு மரத்தின் [ நூறு ஆண்டுகள் வயதான மரம் ] காய், பூ, பட்டை ஆகியவற்றை சம அளவு சேகரித்து, சூரணமாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், நாட்பட்ட  தோல் நோய் கூட குணமாகும்  .(1026)

14.      பொடுதலைச் சமூலச் சாறும் நல்லெண்ணெயும் சம அளவு எடுத்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுகி வந்தால் தோல் நோய், பொடுகு ஆகியவை தீரும். (1506)

15.   பொன்னாவாரை வேரை எடுத்து எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைத்துப் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும். (993)

16.   மண் பற்று இட்டு ஒன்றரை மணி நேரம் காலை இளம் வெயிலில் அமர்ந்து மண் காய்ந்த பின் குளித்து வந்தால் தோல் நோய்கள் அகலும். (1022)

17.   வேப்பம் பழத்தின் ரசத்தை எடுத்து மணப்பாகு (சிரப்) செய்து தோலைப் பற்றிய நோய்களுக்குத் தரலாம்.

18.   வேப்பம் விதை மூன்று கிராம் எடுத்து சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை மாலையாக நீண்ட நாள் சாப்பிட்டு வந்தால், தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல்புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.

19.   வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும். (1155)

20.   வேப்பம் பருப்பை வெல்லம் சேர்த்து அரைத்து 3 கிராம் அளவு எடுத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் தீரும்.  (1668)  மூலநோய் குணமாகும்.  (1655)

 ==================================================