மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “ந”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “ந”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜூலை, 2021

நெஞ்சு - வலி (Chest Pain)

01.  இஞ்சிச் சாறு அரைப் பாலாடை, வெள்ளைப் பூண்டுப் பல் சாறு அரைப் பாலாடை, தேன் அரைப் பாலாடை எடுத்து ஒன்றாகக் கலந்து அருந்த வேண்டும். காலை மாலையாக மூன்று நாள் சாப்பிட வேண்டும். பிஞ்சுக் கத்தரிக் கார் சம்பார் வைத்து சாப்பிடலாம். நான்காம் நாளிலிருந்து பனை வெல்லம் ஒரு பெரிய நெல்லிக் காய் அளவு எடுத்து, ஒரு தம்ளர் நீரில் கலக்கவும். அத்துடன் ஒரு எலுமிச்சம் பழத்தைச்  சாறு பிழிந்து அத்துடன் சேர்க்கவும். இதைக் காலை மாலையாக ஏழு நாட்கள் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றிலும், மாலையில் 5 மணி வாக்கிலும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் நெஞ்சு வலி முற்றிலும் குணமாகும்.(ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

02.  ஓம வல்லி இலை மூன்றினைக் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் நெஞ்சு வலி தீரும்.(109)

03.  செம்பருத்திப் பூவை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி, பாலும் சர்க்கரையும் சேர்த்து, காலை, மாலை பருக மார்பு வலி, இதய பலவீனம் தீரும். காபி, தேநீர், புகையிலை நீக்க வேண்டும்

04.  தான்றிகாயைப் பொடித்து தேனில் கலந்து உட்கொண்டால், மார்பு வலி, இருமல், தணியும். அம்மை நோய்க்கும் நிவாரணமாகும்

05.  துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் சேர்த்து ஒன்றாகக் கலக்கிச் சாப்பிட நெஞ்சு வலி குணமாகும். (1173)

06.  தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து, சுட வைத்து, நெஞ்சில் தடவி வந்தால், நெஞ்சு வலி குணமாகும்.   (1823)

07.  வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி, வதக்கி, 2 தம்ளர் நீர் விட்டு சுண்டக் காய்ச்சி, அரைத் தம்ளர் வீதம் காலை, மாலை இரு வேளை குடித்தால் நெஞ்சு வலி தணியும்.

08.  வெந்தயக் கீரை ஒரு பிடி எடுத்து சிறிதளவு புளி, காய்ந்த அத்திப் பழம் 2 (நறுக்கியது), உலர் திராட்சை 10, ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, சிறிதளவு தேன் கலந்து பருகினால், மார்பு வலி, மூச்சடைப்பு சரியாகும்.

09.  வெந்தயத்தை வேகவைத்து தேன் விட்டுப் பிசைந்து கூழாக்கி உட்கொண்டால் மார்பு வலி குணமாகும். (977) (1169)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================

நெஞ்சு - படபடப்பு (Induced Heart Beat))

1)    தினசரி ஒரு பேரிக் காய் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு பட படப்பு நீங்கும். (966)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================

நெஞ்சு - சளி (Sputum)

01.  அதிமதுரப் பொடி ஒரு கிராம் காலை மாலை சர்க்கரை சேர்த்து உண்டு வந்தால் மார்புச் சளி விலகும். இருமல், தொண்டை வலி நீங்கும்.(133)

02.  அமுக்கிராங் கிழங்கைப் பொடி செய்து தினமும் இரவில் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் கபம் வெளியேறும்.(144)

03.  அழிஞ்சில் இலையை அரைத்து ஒரு கிராம் வீதம் காலை மாலை கொடுத்து வந்தால் கப நோய்கள், கிராணி, குன்மம் ஆகியவை நீங்கும்.(325)

04.  அறுகம்புல் சாறு பருகி வந்தால் சளித் தொல்லை இருக்காது. (137) (1130)

05.  ஆடாதொடை இலைகள் 10 எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி, தேன் கலந்து காலை மாலை  40 நாட்கள் பருகி வந்தால், எலும்புருக்கி நோய், காசநோய், இரத்தகாசம், சளி ஆகியவை தீரும்.

06.  ஆடாதொடை மணப்பாகு:- ஆடாதொடை இலைகள் 700 கிராம் எடுத்து, நறுக்கி, நெய்யில் வதக்கி, இலவங்கம் 10 கிராம், ஏலக்காய் 4 ,சிற்றரத்தை 10 கிராம், அக்கரகாரம் 10 கிராம் ஆகியவற்றைத் தூள் செய்து போட்டு, பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து, தேன் பதமாகக் காய்ச்சி ஒரு சீசாவில் அடைத்து வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை தீரும். 3 வேளையாக தொடர்ந்து கொடுத்து வந்தால், நிமோனியா காய்ச்சல், மார்ச்சளி, காசம், நீர்த்த ஆஸ்துமா, எலும்புருக்கி நோய், கபம், இருமல் ஆகியவை போகும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டரை மி.லி முதல் 5 மி.லி வரை கொடுக்கலாம்.

07.  இன்புறா வேரை நிழலில் உலர்த்தித் தூள் செய்து அதில் 10 கிராம் எடுத்து அரிசி மாவில் கலந்து இரண்டொரு அடை செய்து காலை மாலை சாப்பிடக் கபரோகம் (நெஞ்சுச் சளி) அனைத்தும் தீரும்.

08.  எலுமிச்சம் பழச் சாறு, மாதுளம் பழச் சாறு இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளித் தொல்லை தீரும்.(114)

09.  ஏலக்காய்ப் பொடியை நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி குணமாகும். (134)

10.  ஓமம், கிராம்பு, உப்பு சேர்த்து நன்கு மென்று நீரை விழுங்கினால், இருமல் தொல்லை தணியும்.கபம், சளி கரையும்.

11.  ஓமவல்லி இலைகளை நான்கு ஐந்து எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் விட்டுக் காய்ச்சிக் கொதிக்க  வைத்து, அந்த நீரைப் பருகி வந்தால் சளித் தொல்லை இராது.

12.  ஓமவல்லி இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் சாறு பிழிந்து தாய்ப்பாலுடன் கலந்து, குழந்தைக்குத் தலைக்குத் ண்ணீர் ஊற்றியவுடன் ஒரு பாலாடை புகட்டி விட்டால் சளி பிடிக்காது. [ சிறு குழந்தைகளுக்கு தலைக்குத் தண்ணீர் ஊற்றினால் சிலருக்கு சளி பிடித்துக் கொள்ளும். ]

13.  கருந்துளசி  இலைகளை எடுத்துச் சாறு பிழிந்து இரண்டு வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபக் கட்டு வெளியேறும்.(139)

14.  கலவைக் கீரையை வாரம் இரண்டு முறை சமைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் கபத்தை உடைத்து வெளியேற்றும்.(189)

15.  கல்யாண முருங்கை இலை அடை சுட்டுச் சாப்பிட்டால் நெஞ்சுச் சளி வெளியேறும்.

16.  சங்கு இலைச் சாறு ( காக்கிரட்டை இலை ) எடுத்துப் பாலில் கலந்து குழந்தைகளுக்குப் புகட்டி வந்தால் சளித் தொந்தரவு நீங்கும்.(171)

17.  சிறுகாராமணிப் பயரை வேகவைத்துச் சுண்டலாக்கிச் சாப்பிட்டு வந்தால் கபம் உடைந்து வெளியேறும்.(191)

18.  சிற்றரத்தைப் பொடி ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால், சுரம், சளி, ஈளை, இருமல், தொண்டைப் புண், நீர்க்கோவை, வாயு நீங்கும்.(120)

19.  சுக்கு, மிளகு, கொத்துமல்லி, திப்பிலி, சிற்றரத்தை ஆகியவை சேர்த்துக் கசாயம் வைத்து மூன்று வேளை அருந்தினால், நெஞ்சுச் சளி கரையும்

20.  சுண்டை வற்றலை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊற வைத்து, காயவைத்து, எண்ணெயில் வறுத்து, இரவு உணவில் பயன்படுத்தி வர, மார்புச்சளி, ஆஸ்துமா, வயிற்றுப் போக்கு நின்று விடும்.

21.  சுண்டை வற்றலை உப்புக் கலந்த புளித்த மோரில்  ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் வறுத்து இரவு மட்டும் உணவுடன் உண்டு வர மார்புச் சளி, ஆஸ்துமா  நீங்கும். வயிற்றுப் போக்கு சரியாகும்.(128)

22.  சுண்டை வற்றலை தினமும் 15 எண்ணிக்கை அளவுக்கு எடுத்து சிறிதளவு நல்லெண்ணையில் வறுத்து சாப்பிட்டு வந்தால், காச நோய், மார்புச் சளி, வறட்டு இருமல்  ஆகியவை கட்டுப்படும்.

23.  சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளைஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் வறுத்து இடித்த சூரணம் காலை மாலை 2 சிட்டிகை மோரில் சாப்பிட்டு வந்தால் பேதி, மூலம், பசியின்மை, மார்புச்சளி தீரும்.

24.  சுண்டைக் காயைச் சமைத்து உண்டு வந்தால் மூலக் கடுப்பு குணமாகும்.(1315) கபம் நீங்கும் (1318)

25.  சோம்பு, கொத்துமல்லி, பனைவெல்லம், சுக்கு ஆகியவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்துக் கழாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி, மார்பு எரிச்சல் ஆகியவை குணமாகும்.(169)

26.  சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளைஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் வறுத்து இடித்த சூரணம் காலை மாலை 2 சிட்டிகை மோரில் சாப்பிட்டு வந்தால் பேதி, மூலம், பசியின்மை, மார்புச்சளி தீரும்.

27.  தவசி முருங்கை  இரசத்தை (சாறு) வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு, கொடுத்து வந்தால் மூக்கில் நீர் பாய்தல், உண்ணாக்கு நோய், ஐயம் (கபம்), இரைப்பு, பொடியிருமல் ஆகியவை தீரும்.

28.  தவசி முருங்கை இலைச்சாற்றை 15 மி.லி காலை மாலை சாப்பிட்டு வர  பீனிசம் (ஒற்றைத் தலைவலி), சளி, இரைப்பிருமல், ஆகியவை தீரும்.

29.  தவசி முருங்கைச் செடியை முழுமையாக உலர்த்திப் பொடித்துச் சமனளவு சர்க்கரைப்பொடி கலந்து அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்ண்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும்.

30.  தழுதாழை இலைச் சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மண்டைக் குடைச்சல், மூக்கில் நீர் வடிதல், தும்மல், சளி சிறிது சிறிதாகக் குறையும்.

31.  திருநீற்றுப் பச்சிலை விதை கபத்தைப் போக்கும். இதனால் வயிற்று நோய்கள், சீதக் கழிச்சல், மேகம், நீர் நோய்கள் தீரும்.

32.  துளசி இலைகளைப் பறித்து ஆவியில் அவித்து சாறு பிழிந்து 20 மி.லி. அளவுக்கு அருந்தி வந்தால் நெஞ்சுச் சளி விலகும். (1389)

33.  தூதுவேளை இலைகளை வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, கோழைக்கட்டு, மூச்சுத் திணறல் ஆகியவை சரியாகும். செரிமானத் தன்மை மிகும்.

34.  தூதுவேளை இலையை நெய்யில் வதக்கித் துவையலாகவோ, குழம்பு வைத்தோ சாப்பிட, கபக்கட்டு நீங்கி, உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்

35.  தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்துச் சுட வைத்து நெஞ்சில் தடவி வந்தால் குழந்தைகளைப் பீடிக்கும் நெஞ்சுச் சளி நீங்கும்.(1119)

36.     நஞ்சறுப்பான் இலைப் பொடி ஒரு கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும். சளியைப் போக்கும்.  (1707)

37.  நத்தைச் சூரி இலைச் சாற்றை 15மி.லி எடுத்து காலை மாலை அருந்தி வந்தால் நெஞ்சுச் சளி தீரும்.  (1384)

38.     நெஞ்சுச் சளி குழந்தைகளுக்கு தீர்வதற்கு எள் எண்ணெயில் ஒரு விரலைத் தோய்த்து எடுத்து விரலை குழந்தையின் இரு மூக்குத் துவரத்திலும் விட்டு விட்டு எடுக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து அரைப் பாலாடை எள் எண்ணெயைக் குடிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் செய்தால், நெஞ்சுச் சளி, இருமல் எல்லாம் ஓடிவிடும்.

39.     பொடுதலைக் கீரையுடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து துவையல் செய்து சுடு சோற்றில் போட்டு நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி தீரும். (1504)

40.  மஞ்சள் தூளுடன் சிறிது தேன் கலந்து குழைத்து காலை மாலை அருந்தினால் சளி, தொண்டை அடைப்பு சீராகும்.

41.  மணலிக் கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி நீங்கும். நுண்புழு விலகும்.(124)

42.  மணித் தக்காளி வற்றலை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது உப்பு, ஓரிரண்டு வறுத்த மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்துப் பொடித்து சோற்றுடன் பிசைந்து, 2 – 3 வேளை சாப்பிட்டால் நெஞ்சுச் சளி நீங்கும்.

43.  மணித் தக்காளிக் கீரை ஒரு கைப்பிடி, மிளகு 5, திப்பிலி 2, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, சேர்த்து நன்றாக அரைத்து தேன் கலந்து உட்கொண்டால், கபம், இருமல் தணியும்.

44.  வல்லாரை இலையுடன் தூதுவேளை சேர்த்து அரைத்து பாலில் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளிக் கட்டு நீங்கும்.(209)