01. அகத்திக் கீரை, சுண்டை வற்றல் போன்ற கசப்புச் சுவை உடைய உணவுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
(548)
02. எலுமிச்சம் பழம் சாறினை ஒரு டம்ளர் மோரில் பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும் (534)
(1869)
03. கருங்காலிப் பட்டை 100 கிராம், சதகுப்பை, ஏலக்காய் தலா 20 கிராம் எடுத்து, இலேசாக வறுத்துப் பொடிக்கவும். இரண்டு தம்ளர் நீரில் 5 கிராம் அளவு தூளைப் போட்டு, சுண்டக் காய்ச்சி அருந்தினால், இரத்த அழுத்தம் குறையும்.
04.
செம்பருத்தி பூவை உணவில் சேர்த்துக் கொள்வதால் சோர்வு
நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக
அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
05. சுண்டை வற்றல், அகத்திக்கீரை போன்ற
கசப்பு உணவுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். (548)
06.
தர்பூசணி விதையில் மெக்னீஷியம் இருப்பதால், இதயப் பிரச்சினைகள் வராது. அதற்கு தர்பூசணி விதைப் பொடியுடன் யுடன் சீரகம் சேர்த்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதை அருந்துவதால் இரத்த அழுத்தம் சீராகும்.
07. திராட்சைச் சாறுடன், சிறிதளவு சீரகப் பொடி கலந்து சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்படும்
08. திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராகும். (1215)
09. துளசி இலை, முருங்கை இலைகளை சம அளவு எடுத்து, சாறு பிழிந்து, ஒவ்வொன்றிலும் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து, சிறிது சீரகப் பொடி கலந்து காலை, மாலை இருவேளைகளும் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும். உப்பு, புளி, காரம் உணவில் குறைக்க வேண்டும்.
10. தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால், வெண்ணெய், நெய், மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்த்தல் வேண்டும். மீன் சாப்பிடலாம். சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்னெய் பயன் படுத்தலாம். (983)
11. நந்தியாவட்டைப் பூக்களையும் ரோஜாப் பூக்களையும் நன்கு காய வைத்து சம அளவு சேர்த்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
12. நிலவேம்பு இலைச் சாறை தினசரி 15 – 20 மி.லி அளவுக்கு அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
13. நீர்பிரமிப் பூண்டு இலைப் பொடியை தினம் 2 வேளை தண்ணீருடன் கலந்து அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் சீர்பெறும்.
14. நீர்வேம்பின் வேரும், சர்பகந்தி வேரும் சம அளவு இடித்துத் \தூள் செய்து ஒரு சிட்டிகை எடுத்துத் தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சீராகும். (541)
15. பரங்கிக் காய் சாறுடன் சீரகப் பொடி சேர்த்து அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் சீராகும்.
16. மருத மரப்பட்டைப் பொடி ஒரு கிராம் எடுத்துத் தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.
17. மாதுளம் பழச் சாற்றை, தினமும் 150 மி.லி தொடர்ந்து இரு வாரங்கள் பருகி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
18. மாம்பழம்சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். (1213)
19. மீன் சாப்பிடலாம் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் (546)
20. வாழைக் காயில் உப்புச் சத்துக் குறைவாகவும் பொட்டாசியம் சத்து அதிகமாகவும் இருப்பதால், வாழைக் காய் உணவு இரத்த அழுத்தத்தைச் சமப்படுத்தும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !
(02. ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை
சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
===========================================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )15]
{29-05-2021}
===========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக