01. அத்திப் பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி காலை மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
02. அத்திப் பழத்தை உலர்த்திப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவுக்குப் பாலில் கலந்து காலை மாலை உண்டு வந்தால், இதயம் வலுப் பெறும். இரத்தம் ஊறும். (561)
03. ஓரிதழ்த் தாமரையைப் பொடி செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர இதயம் வலுப்பெறும். (974)
04. சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சிக் கசாயம் ஆக்கி குடித்து வர இதயம் பலமடையும். இதய படபடப்பு நீங்கும். ரத்தம் பெருகும்.
05. சீத்தாப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, இதயம் வலுப் பெறும். (984)
06. செம்பருத்திப் பூவை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி, பாலும் சர்க்கரையும்
சேர்த்து, காலை,
மாலை பருக மார்பு வலி, இதய பலவீனம் தீரும். காபி,
தேநீர், புகையிலை நீக்க
வேண்டும்.
07. துளசி இலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ,இரத்த அழுத்தத்தைக்
கட்டுப்படுத்தும். இதய நோய் வராமல் தடுக்கும்.
08. தூதுவேளைக் காயை உலர்த்தி, தயிர், உப்பு
ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டு வர , பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.
09. மருத மரப் பட்டையை இடித்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து 50 – 60 மி.லி வரை தினம் சாப்பிட்டால் இதயம் பலப்படும்.
10. ரோஜாப்பூ, கற்கண்டு, தேன்
சேர்த்து கலந்து வெயிலில் வைத்து தினசரி சிறிது சாப்பிட்டு வந்தால் ஆசன வாய், நுரையீரல் பலமாகும். (1577) சிறுநீரகம்
பலமாகும். (1595) இதயம் பலமாகும். (1616)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !
(02. ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை
சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )15]
{29-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக