மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 மே, 2021

இரத்தத் தூய்மை (Blood Purification)

 

01.   இஞ்சிச் சாறு, தேன்  ஆகியவை வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.(567)

 

02.   இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.( 532)

 

03.   காசினிக் கீரையைப் பயத்தம் பருப்புடன் சேர்த்துச் சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். (559)

 

04.   குங்குமப்பூவுடன் தேன் கலந்து தினசரி  சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.(565)

 

05.   செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை  அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

 

06.   தக்காளிப் பழத்தை தினமும் உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். உடல் வலுப் பெறும். ( ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.) (551)

 

07.   தர்ப்பைப் புல்லைக் கழாயமாக்கி வாரம் ஒரு முறை பருகினால் இரத்தம் சுத்தமாகும். ( 537) (1273) (2022)

 

08.   திராட்சைப் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் நீங்கும்; சுரம் தணியும்; இரத்தம் சுத்தம் அடையும். (384);

 

09.   தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.(480)

 

10.   தினசரி உணவில் தக்காளிப் பழம் சேர்த்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாத நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.(551)

 

11.   நில ஆவாரைச் சமூலம் எடுத்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, பொடி செய்து 2 கிராம் எடுத்து நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தியாகும்.   (1748)

 

12.   நீர்முள்ளி விதைப் பொடி ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல்  தீரும்.  (1422)  இரத்தம் சுத்தமாகும்  (1437)

 

13.   புளிச்சக் கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் இரத்தம் சுத்தம் ஆகும். (549)

 

14.   பொன்னாங் கண்ணிக் கீரையை சிறிதாக நறுக்கி, சின்ன வெங்காயம், சீரகம், பாசிப்பருப்பு, பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேக வைத்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்

 

15.   வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால்  இரத்தம் சுத்தமாகும் (556)

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அ புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021}

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக