01. ஈஸ்வர மூலி வேரைத் தேனில் அரைத்து ஒரு கிராம் வீதம் உள்ளுக்கு சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும் (563)
02. கொய்யாப் பழத்தை இரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், பலன் கிடைக்கும்
03. கொய்யாப் பழத்தை சாலட் போல் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும். இரத்த சோகை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
04. கொய்யாப் பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும் (533)
05. கொள்ளினை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் சிவப்பு அணுக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும்
06. சதகுப்பை விதைப் பொடியை சிறிதளவு எடுத்து கொத்துமல்லி இலைச் சாற்றில் கலந்து குடித்தால் இரத்த சோகைகுணமாகும். மாதவிடாய் நேரத்தில் பெண்கள் இதைக் குடித்து வந்தால் இரத்தம் விருத்தி அடையும்.
07. சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் எடுத்து வந்தால் இரத்த சோகை குணமாகும். (542) (1936)
08. தூதுவேளை இலைப்
பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை
நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
09. பீர்க்கங்காய் வேர் கழாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும் (566)
10. முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து இருப்பதால், இரத்த சோகைக்கு மிகுந்த பயன் அளிக்கும். அதற்கு முருங்கை இலையைக் கூட்டாகவோ, துவட்டியோ உணவுடன் அருந்தலாம்.
11. மூக்கிரட்டை இலையை பொரியல் அல்லது துவையலாக சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்
.(557) (633)
12. மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம் புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீரேற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு, மகோதரம் தீரும்..
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !
(02. ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை
சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )15]
{29-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக