மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 மே, 2021

இரத்த விருத்தி (Blood well-up)

01.  அத்திப் பழத்தை உலர்த்திப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி காலை மாலை பாலில் உட்கொண்டு வந்தால்  இரத்தம் ஊறும். (561)

 

02.  காரட், காலி ப்ளவர்  ஆகியவை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் விருத்தியாகும்.(543)

 

03.  கொடிப் பசலைக் கீரையை வாரம் இருமுறை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும். (550)

 

04.  செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் ஊறும்.(592)

 

05.  நெல்லிச் சாற்றுடன் சிறிது திப்பிலிப் பொடி கலந்து அருந்தி வந்தால் இரத்தம் விருத்தியாகும்.

 

06.  பீட்ரூட் கிழங்கு புதிய இரத்தம் உருவாக்குவதில் வலிமையானது.(552)

 

07.  பொன்னாங்கண்ணிக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால், இரத்தம் விருத்தியாகும்.  (1236)

 

08.  மாதுளம் பழச் சாறினைத் தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின்  அதிகரிக்கும்.

 

09.  மாதுளம் பழச் சாற்றில் தேன்கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்தம் விருத்தியாகும்.

 

10.  முருங்கைக் கீரையைத் துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டையை உடைத்துக் கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.(538)

 

11.  வாழைக் காய் சமைத்து உண்பதால் இரத்தம் பெருகும். அதிகம் உண்டால் வாயுத் தொல்லை ஏற்படும்.(735)


 

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021} 

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக