01. ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சம அளவு எடுத்து இடித்து சலித்து ஒன்றாகக் கலந்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய், சுவாசகாசம், இருமல், சளிச்சுரம், சளி, நரம்பு இழுப்பு, குடைச்சல் ஆகியவை குணப்படும்.
02. கண்டங்கத்தரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 100 மி. லி வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி ( T.B ),ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்.
03. நீர்முள்ளி விதைப் பொடி ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல் (ஆஸ்துமா) தீரும். (1422)
04. பிரமதண்டு சமூலச் சாம்பல் மூன்று அரிசி எடை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல், நுரையீரல் நோய்க\ள் தீரும். (1475)
05. மருதம் பட்டை, சிற்றரத்தை, திப்பிலி, சுக்கு, ஆகியவற்றைச் சார்த்துக் கசாயம் வைத்து 48 நாள் அருந்தி வந்தால், இரைப்பிருமல் (ஆஸ்துமா) குணமாகும். (1465)
06. விஷ்ணு கிராந்திப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) குணமாகும்.(182)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !
(02. ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை
சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )15]
{29-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக