01. அடிக்கடி சோம்பு நீர் பருகி வந்தால் ஊளைச் சதை குறையும்.(1055)
02. தினசரி வெறும் வயிற்றில் காலையில் ஒரு தேக்கரண்டி தேனுடன் சுடுநீர் கலந்து பருகி வந்தால் ஊளைச் சதை குறையும்.(1057)
03. பப்பாளிக் காயைச் சமைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் தடித்த உடல் குறையும்.(1185)
04. புளியாக் கீரை சாப்பிட்டு வர, சதை நரம்புகள் சுருங்கும்.(1062)
05. பூண்டு, வெங்காயம் ஆகியவை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை சீராகும்.(1059)
06. பொன்னாவாரைக் கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அளவுக்கு அதிகமான உடம்பு குறைந்து உடல் நலம் பெறலாம்.(1058)
07. மந்தாரை வேரை எடுத்து நீர் விட்டுக் கொதிக்க வைத்துப் பாதியாகக் காய்ச்சி கசாயம் செய்து அருந்தி வந்தால் தடித்த உடல் மெலியும். (1060) (1456) (1976)
08. வாழைத் தண்டுச் சாறு, பூசணிச் சாறு, அறுகம் புல் சாறு ஆகியவற்றில் எதையாவது ஒன்றைத் தொடர்ந்து பருகி வந்தால் ஊளைச் சதை குறையும் (1056)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக