மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

உடல் - சதை பிடிக்க (To Build-up Body Flesh)

01.   உருளைக் கிழங்கு சிறுவர்களுக்கு நல்ல உணவு. அதிகமாகச் சேர்த்து வந்தால் உடல் வளர்ச்சி பெருகும். வயதானவர்கள் தவிர்த்தல் வேண்டும்.(798)

 

02.      நிலவாகைச் சமூலம் எடுத்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து 2 கிராம் அளவுக்கு எடுத்து பசு நெய்யில் சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும்.  (1682)

 

03.   நெல்லிகாய்த் தூள் அரைத் தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் சதை போடும்.  எடை கூடும்.  (1053)

 

04.      பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் வளர்ச்சி நன்கு இருக்கும். நரம்புத் தளர்ச்சி சரியாகும்.(788)

 

05.      பூசணிக் காய், அவல், மிளகாய்த் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து வேக வைத்து சிறு சிறு உருண்டைகள் ஆக்கி காய வைத்து நல்லெண்ணையில் வறுத்துச் சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் சதை பிடிக்கும். உடல் பலம் பெறும்.  (1063)

 

06.      பேரீச்சம் பழம் இரண்டு இரவு படுக்கும் முன் மென்று சாப்பிட்டு பால் சாப்பிட்டு வந்தால், உடல் சதைபிடிக்கும்.(750) (950) (990)

 

07.   வெந்தயத்தை இரவில்படுக்கப் போகும் முன் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் உட்கொண்டால் உடல் பருக்கும். எடை கூடும்.  (1251)

  

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================


 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக