01. அறுகம்புல் சாறும் வில்வ இலைச் சாறும் சம அளவு கலந்து காலை மாலை ஒரு அவுன்ஸ் ( 30 மி.லி ) வீதம் சாப்பிட்டால் உடல் வலி தீரும்.(738)
02. கண்டதிப்பிலியை ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து பொடித்து, சிறிதளவு பாலில் கலந்து குடித்து வந்தால், உடல் வலி, முதுகு வலி, மூட்டு
வலி, வாத
நோய் குறையும்.
03. துத்தி இலையைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து, அந்நீரில் துணியை
நனைத்துப் பிழிந்து ஒற்றடம் கொடுக்க உடலில் ஏற்படும் வலிகள் நீங்கும்.
04. நொச்சி இலையை வெந்நீரில் போட்டு வேகவைத்து நீராவி பிடிக்க, வியர்வை உண்டாகி
சுரம் தணியும். வளிக்குற்றத்தால் உண்டான உடல் வலி தீரும்.
05. முடக்கத்தான் இலையுடன் சீரகம் சேர்த்து கழாயம் செய்து பருகினால் உடல் வலி தீரும் (745) (756)
06. முருங்கை ஈர்க்கு எடுத்து இரசம் வைத்துச் சாப்பிட்டால், உடல் அசதி, கை, கால் வலி ஆகியவை தீரும்.
(769) (1998) முருங்கை
ஈர்க்குக் கசாயம் வைத்துச் சாப்பிட்டாலும் உடல் அசதி, கை,
கால் வலி தீரும்.
(1571)
07. வாத நாராயணன் இலையைப் போட்டுக் கொதிக்க வைத்து நீரில் குளிக்க உடல் வலி தீரும்.(790)
08. வில்வ இலைச் சாறும், அறுகம் புல் சாறும் கலந்து காலை மாலை 25 மி.லி வீதம் சாப்பிட்டால் உடல்வலி தீரும் (738)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக