மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

உடல் - வெப்பம் தணிய (To reduce Body Heat)

01.   அஸ்வகந்தி ( அமுக்கரா ) இலையைப் பச்சையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டால்  உடல் வெப்பம் குறையும்.(776)

 

02.   ஆட்டுப் பால் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணியும்.(794)

03.   கமலா ஆரஞ்சுப் பழம் உட்கொண்டால் உடல் வெப்பம் குறையும். (1231)

 

04.   தயிர் சோறு தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணியும்.(810)

 

05.   நத்தை சூரி விதையை வறுத்துப் பொடித்து நீரில் இட்டுக் காய்ச்சி, வடித்து, பால், கற்கண்டு  கலந்து காலை மாலை  பருகி வர உடல் வெப்பு தணியும். கல்லடைப்பு, சதையடைப்பு, வெள்ளை படுதல் ஆகியவை தீரும்.

 

06.   பரங்கிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் வெப்பம் தணியும்.

 

07.   மாசிக்காய், ஆவாரம் பிசின், ஏலக்காய், கடுக்காய்த் தோல், கிராம்பு, சாதிக்காய், வல்லாரை ஆகியவற்றை தனித்தனியாகப் பொடித்து, ஒவ்வொன்றிலும் தலா மூன்று கிராம் எடுத்து கலந்து தினமும் காலை, மாலை வெண்ணெயில் கலந்து உண்டால் உடல் வெப்பம் தணியும். ஆண்களுக்குத் தாது விருத்தியாகும்.

 

08.   வெந்தயம், கோதுமை ஆகியவற்றை வறுத்து கஞ்சியாக வைத்துச் சாப்பிடுங்கள். உடல் வெப்பம் தணியும்.

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக