01. அதிமதுரம், நேத்திர மூலி
இரண்டையும் தூள் செய்து வெந்நீர் கலந்து உட்கொண்டு வந்தால் கண்கள் ஒளி பெறும். (002)
02. இருவாட்சி செடியின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம் அனைத்தையும் (சமூலம்) எடுத்து பசும்பால்
விட்டு அரைத்து, அதிலிருந்து ஒரு
கிராம் எடுத்து தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் கண் ஒளி பெருகும்.(1681)
03. சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்து தூள் செய்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி, தலைமுழுகி வந்தால், கண்நோய்கள் குணமாகி, கண்கள் ஒளி பெறும்.(012)
04. சூரிய உதயத்திற்கு முன்பு படுக்கையை விட்டு எழுவதைப் பழக்கப் படுத்திக் கொண்டால், கண்கள் ஒளி பெருகும்.(047)
05. தான்றிக் காய்ப் பொடி கால் தேக்கரண்டி தேனில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண்கள் ஒளி பெருகும்.(027)
06. தூதுவேளைக்காய் ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள் ஒளி பெருகும்.(017) (1128)
07. நேத்திரமூலி இலைத் தூள் மற்றும் அதிமதுரம் தூள் தலா அரைத் தேக்கரண்டி எடுத்து உட்கொண்டு வந்தால், கண்கள் ஒளி பெறும். (002)
08. நேத்திரமூலி, அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் கண்கள் ஒளி பெறும்.(002)
09. பற்பாடகம் இலைகளைப் பறித்து வந்து பால் வீட்டு அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் கண்களில் ஒளி பெருகும்.
(1445)
10. பொன்னாங்கண்ணி இலையை சித்திரை வைகாசி மாதங்களில் தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும். (025)
11. முருங்கைக் கீரையில் வைட்டமின் “ஏ” இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் உதவும். நெய்யில் வறுத்து உணவுக்கு முன் சாப்பிட்டால் கண்கள் ஒளிபெறும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக