01. அத்திப் பழம் தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.(741) (1190)
02. அம்மான் பச்சரிசி இலையைத் தூதுவேளை இலையுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல்பலம் பெறும்.(757)
03. அரிவாள்மனைப் பூண்டின் வேர்ப் பொடியை ஒரு தேக்கரண்டிப் எடுத்து தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள்
உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக்
கட்டுப்படுத்தும்.
04. கருங்காலி மரப் பிசினை எடுத்துக் காயவைத்துப் பொடித்து, பாலில் கலந்து அருந்தி வந்தால், உடல் அதிக பலம் பெறும்.
05. கேழ்வரகுக் கூழ் அடிக்கடிச் சாப்பிட்டு
வந்தால் உடல் உறுதி பெறும்.(945)
06. சம்பங்கிப் பூக்களை, பாலில் போட்டு கொதிக்க வைத்து , ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலிமை பெறும்.(775)
07. தான்றிக்காய், நிலப்பனை, பூனைக்காலி மூன்றையும்
சம அளவு எடுத்து அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து காலை மாலை இரு வேளையாக பசும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் பலப்படும்.
08. தூதுவேளைப் பூ 10 எண்ணிக்கை எடுத்து பாலில் போட்டுக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் உடல் பலம்
பெறும். (1419)
09. தூதுவேளை இலைகளுடன் அம்மான் பச்சரிசி இலைகளையும் சேர்த்து சமையல் செய்து
உணவுடன் உண்டு வந்தால், உடல் பலம் பெறும். (757)
10. நெல்லிக்கனி தினமும் மூன்று சாப்பிட்டு வந்தால் உடல் பலமும் நோய் எதிர்ப்பு ஆற்றலும் பெருகும்.(736)
11. பசும்பாலைக் காய்ச்சும்போது ஒரு கொதி
வந்தவுடன் சம்பங்கிப் பூக்களைப் போட்டு, சர்க்கரை சேர்த்து வடிகட்டிக் குடித்து
வந்தால் உடல் வலிமை பெறும்.(775)
12.
பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறலாம்.(749)
13. முருங்கைப் பிசினை எடுத்துக் காய வைத்துப் பொடி செய்து அரைத் தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.
14. மிளகரணைக் காய், மிளகரணையின் வேர்ப்
பட்டை ஆகியவற்றை எடுத்து நீர் விட்டுக் காய்ச்சிக் கசாயம் வைத்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் கூடும்.
(1520)
15. வெந்தய இலையுடன் பாதாம் பருப்பு, கசகசா, கோதுமைப்பால், நெய், கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.
16. வெந்தயத்தை இட்லி, தோசை மாவுடன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக