01. அறுகம் புல் ஒரு பிடி, 10 மிளகு, 2 கிராம் சீரகம் சேர்த்து அரைத்துப் பசும் பாலில் கலந்து சாப்பிட உடலில் உள்ள நச்சு நீர் வெளியேறி விடும்
(871)
02. நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை ஆகியவற்றைச் சிதைத்து நீர் விட்டுக் கசாயம் செய்து பனங் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் உடம்பில் உள்ள துர்நீர் வெளியேறும். (1370)
03.
நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை, நீர்முள்ளி விதை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிதைத்து பனங்கற்கண்டு சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடலில் உள்ள துர்நீர் நீங்கும். (1370) தாது பலம் உண்டாகும்.
(1411)
04. பப்பாளிக் காய் தினமும் சாப்பிட்டு வந்தால், தேவையில்லாத கெட்ட நீர் உடலை விட்டுச் சிறு நீர் வழியாக வெளியேறி விடும்
(949)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக