01. அரிவாள்மனைப்
பூண்டின் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து பொடி
செய்து சர்க்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால்
ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்
02. இலந்தை மரத்தின் பூவைச் சுத்தம் செய்து மை போல் அரைத்து உடல் முழுதும் பூசிக் கொண்டால் உடல் எரிச்சல் தீரும்.(746) (999)
03. இன்புறா இலைகளைச் சேகரித்து, அரைத்து, சாறு
எடுத்து எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வந்தால் காய்ச்சலால் உண்டான உடல் எரிச்சல் தீரும் (122)
04. கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேளையும்
எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும்.
05. முசு முசுக்கைச் சாறுடன் சம அளவு நல்லெண்னெய் கலந்து, காய்ச்சி, வாரம் ஒருமுறை தலை முழுகி வந்தால் உடல் எரிச்சல், தேகக் காந்தல் தீரும் (1023)
06. வாழைப்பூ வெள்ளை, வெறி, உடல் கொதிப்பு, சீதபேதி, ஆசன வாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும். ஆண்மை தரும்.
07. வெள்ளரிக் காயை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் ஏற்படும் எரிச்சல் தணியும். தோல் புத்துயிர் பெறும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக