மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

உடல் - எடை அதிகரிக்க. (To Increase Body Weight )

01.   கடலை, நேந்திரம் பழம், பசும் பால் ஆகியவை மெலிந்த உடலைப் பருமனாக்கும். தினசரி சாப்பிட்டு வரலாம். உடல் எடை கூடும்.(787)

 

02.   கொன்றைப் பூவைப் பாலுடன் கலந்து காய்ச்சி உட்கொள்ள உள்ளுறுப்புகளை வன்மைப்படுத்தும். மெலிந்தோர் உடலைத் தேற்றும்.

 

03.   சீரகத்தை, தூள் செய்து, கருப்பட்டி சேர்த்து, இலேகியமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், உடல் மெலிந்தவர்கள் உடல் எடை அதிகரிக்கும்.

 

04.   தேன் ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து தினசரி இரவில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும் (1184)

 

05.   நெல்லிகாய்த் தூள் அரை தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர உடலில் சதைப் பிடிப்பு கூடும். உடல் எடை கூடும். (1053)

 

06.   பூசணிக் காய் சமைத்து தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடும். உடல் எடை கூடும். (1054) (1497) (1974)

 

07.   பூசணிக் காய், அவல், மிளகாய்த் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து வேக வைத்து, சில உருண்டைகளாக உருட்டிக் காய வைத்து, நல்லெண்ணெயில் வறுத்துச் சாப்பிட்டு வர மெலிந்த உடல் சதைப் பிடிக்கும். உடல் எடை கூடும். உடல் பலம் பெறும்.(1063)

 

08.   பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம் பருப்பு, நெய்  சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.

 

09.   மணித் தக்காளி இலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொண்டால், உடல் பருக்கும்.


=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக