கண் அதைப்பு
01. வெள்ளரியில் அஸ்கார்பிக் மற்றும் காஃபிக் அமிலங்கள் இருப்பதால் கண் அதைப்பு என்று சொல்லக் கூடிய கண்ணின் கீழ் உள்ள வீக்கத்திற்கு வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி இரு கண்களிலும் தினமும் வைத்து வர வீக்கம் குறையும்.
கண் அரிப்பு
01. சோற்றுக் கற்றாழையைத் தோல் நீக்கி அதன் சோற்றுப் பகுதியை மட்டும் எடுத்து, நன்கு கழுவி கண்களின் மேல் வைத்துக் கட்டினால், கண் அரிப்பு நீங்கும். (001)
02. வில்வம் தளிரை வதக்கி இளஞ் சூட்டில் ஒற்றடம் கொடுத்தால் கண் வலி, கண் சிவப்பு, கண் அரிப்பு நீங்கும் (39)
கண் இரத்தப் படலம்
01. களாப்பூவை (தூய்மையான பூ தேவை) நல்லெண்ணெய்யில் போட்டு வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளி நாள் தோறும் கண்களில் விட இரத்தப் படலம், கரும் படலம், வெண் படலம், சதைப் படலம் அகலும்.
(005) (048)
02. வேப்பங்கொழுந்து, முதிர்ச்சியான இலை, ஆகிய
இவ்விரண்டையும் இடித்து, அப்பொடியின் அளவிற்கு
அரைப்பங்கு ஓமமும் உப்பும் சேர்த்துப் பொடித்து, புசிக்கத் தொடங்கின், அதனால், கண்ணிலிருக்கும் படல மறைப்பு, காமாலை, மாலைக்கண், புழு
வெட்டு முதலிய நோய்கள் அகலும்.
கண் – கிட்டப் பார்வை
01. புளிய இலைச் சாறு, வெங்காயச் சாறு, சுத்தமான நல்லெண்ணெய் மூன்றையும் கண்ணில் கட்டி (
கண்ணில் விட்டு ) 10 நிமிடம் கழித்துக் குளித்தால் கிட்டப் பார்வை, தூரப் பார்வைக் குறைகள் நீங்கும். (026)
கண் - கிருமித் தொற்று
கண் – குளிர்ச்சி பெற
01. அரைக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். (003)
02. சுரைக்காயைப் பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும். மஞ்சள் காமாலை கட்டுக்குள் வரும். (1089) (1902)
03. தாமரை இதழ்கள் ஒரு கைப்பிடி எடுத்து இரு தம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை அல்லது தேன் சேர்த்து தினசரி ஒரு வேளை வீதம் அருந்தி வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும். உட்சூடு தணியும். (004)
கண்ணில் – சுண்ணாம்பு படுதல்
01. சுண்ணாம்பு கண்ணில் விழுந்து விட்டால், கோவை இலையைச் சுத்தம் செய்து கசக்கிச் சாறு எடுத்து, தாய்ப் பாலுடன் கலந்து தினசரி மூன்றுவேளை கண்களில் விட குணமாகும்.(020)
01. நெல்லிக் காயைச் சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி வீதம் இரு வேளைகள் குழந்தைகளுக்குக் கொடுத்து வர, கண் சூடு தணியும். (010)
01. புளிய இலைச் சாறு, வெங்காயச் சாறு, சுத்தமான நல்லெண்ணெய் மூன்றையும் கண்ணில் கட்டி ( கண்ணில் விட்டு ) 10 நிமிடம் கழித்துக் குளித்தால் கிட்டப் பார்வை, தூரப் பார்வைக் குறைகள் நீங்கும். (026)
கண் – அடியில் தொங்கும் சதை
01. கீழாநெல்லி இலைச் சாறு பொன்னாங்கண்ணி இலைச் சாறு சமனளவு கலந்து நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தலை முழுக, பார்வைக் கோளாறு தீரும்.
0
03. மூக்கிரட்டை வேர்ப் பொடி காலை மாலை ஒரு சிட்டிகை தேனில் சாப்பிட்டு வந்தால் பார்வை மங்கல் குணமாகும். (1547) கண் படலம் குணமாகும். (1574)
கண் – பீளை வருதல்
01. நேத்திரப் பூண்டு முழுச்செடியையும் வேருடன் பிடுங்கி எடுத்து, சுத்தம் செய்து நசுக்கி நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி கண்ணில் ஓரிரு துளிகள் விட்டு வர, கண்ணில் பீளை வருதல் நிற்கும்.(037)
02. கொத்துமல்லிக் கீரையை அரைத்து சிறு உருண்டை உள்ளுக்குச் சாப்பிட்டால், உடற் சூட்டினால் கண்கள் பொங்கி கண்களில் பீளை தள்ளுதல் குணமாகும். (030)
கண் – பொங்குதல்
01. கொத்துமல்லி இலையைச் சுத்தம் செய்து அரைத்து சிறு உருண்டை சாப்பிட உடற் சூட்டினால் கண்கள் பொங்கி நீர் கோளை தள்ளும் நிலை குணமாகும். (030)
02. மாதுளம் பழத் துண்டைக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, அந்தத் தண்ணீரினால் கண்களைக் கழுவினால் கண் பொங்குவது நிற்கும்.
கண் – வெள்ளெழுத்து (Presbyopia)
01. கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில்
கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.
கண் – மை தயாரிப்பு
01. தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசாலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக