மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 மே, 2021

இரத்தக் கொதிப்பு (Hyperemia)

 

01.  அகத்திக் கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தக் கொதிப்பு ஏற்படாது. ஏற்பட்டிருந்தாலும்  நீங்கும் (531)

 

02.  ஆடாதொடை இலைகள்  3 இலைகளைக் குறுக்காக அரிந்து, ஒரு ஏலக்காய் சேர்த்து, 200 மி.லி வெந்நீரில் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி 25 முதல் 50 மி.லி அளவுக்கு தினமும் 3 வேளை கொடுத்தால், குருதியழல் (இரத்தக் கொதிப்பு), காய்ச்சல், இருமல் போகும்.

 

03.  கோரைக் கிழங்குப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து  நீர், பால், தேன் ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு தணியும்.

 

04.  சீரகப் பொடியை, கொதிக்க வைத்து ஆறிய நீரில் போட்டு 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் இரத்தக் கொதிப்பு குணமாகும்.(1756) (1756)

 

05.  செம்பருத்தி இதழ்களை ஐந்து மட்டும் எடுத்து 200 மி.லி தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் அரைத் தேக்கரண்டி சீரகப் பொடியும் தேவையான அளவு பனங்கற்கண்டும் சேர்த்துத் தினமும் பருகி வந்தால் இதயத்திற்குப் பலம் உண்டாகும். இரத்தக் கொதிப்பும் குறையும்.

 

06.  நெருஞ்சில் சமூலத்தை எடுத்து சுத்தம் செய்து  கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தக் கொதிப்பு தீரும்.  (547) (1978)

 

07.  நெல்லி வற்றலும்  (உலர்ந்த காய்) பச்சைப் பயறும் வகைக்கு 20 கிராம் ஒரு லிட்டர்  நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி வடித்து வேளைக்கு 100 மி.லி யாக, காலை மாலை சாப்பிட்டு வர, தலைசுற்றல், கிறு கிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு தீரும்.

 

08.  நெல்லி வற்றல், பச்சைப் பயறு கசாயம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல், இரத்தக் கொதிப்பு தீரும்.  (1432)

 

09.  வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டுகாய்ச்சி அரை லிட்டராகச் சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மி.லி அளவு எடுத்து அதை 100 மி.லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உடல் வெப்பம் தணியும். இரத்தக் கொதிப்பும், நீரிழிவு நோயும் கட்டுப்படும். வெள்ளை நோய், மேகவெட்டை குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்.


=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021} 

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக