01. இலவங்கப் பட்டைத் தூள் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக்
குறைக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் சீர்படுத்தும்.
(Harish)
02. செம்பருத்திப் பூவை
தொடர்ந்து பயன்படுத்தும் போது இரத்தத்தில் உள்ள கொழுப்பு
கரையும். அதிகப்படியான
கொழுப்பு சேர்வதை தடுக்கும்.
03. தர்பூசணி விதைப் பொடியை 2 கிராம் எடுத்து, தண்ணீரில் கலந்து தினமும் அருந்தி வந்தால் கெட்ட கொழுப்பு (L.D.L.Cholosteral) உடலில் சேர்வதைத் தடுக்கும். காரணம் இதன் விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது.
04. பப்பாளி இலையுடன், ஆரஞ்சுப் பழத்தையும் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு குறையும்.
05. பப்பாளிப் பழத்தில் வைட்டமின் இ மற்றும் சி உள்ளதால் கொழுப்புகளின் அளவைச் சீர் செய்யும்.
06. பரங்கிக் காயின் சதைப் பகுதியைச் சாறாகப் பிழிந்து தினசரி இரண்டு வேளைகள் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
07. பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், உடம்பில் தேவையற்ற கொழுப்பு குறையும்.
(1059)
08. மாதுளம் பழச்சாற்றை தினசரி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள Tryglycerides, LDL cholesterol அளவைக் குறைக்கும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !
(02. ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை
சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )15]
{29-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக