மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

இன்சுலின் சுரப்பு (Insulin Secretion)

 

01.   துளசி இலையை சிறிதளவு பறித்து தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.. இன்சுலின் சீராகச் சுரக்கப்பட்டு, நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

 

02.   நமது உடலில் இருக்கும் கணையத்தின் நுண்ணறைகள் இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. இந்த நுண்ணறைகளின் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இந்த நுண்ணறைகளின் செயல் பாட்டினைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்வதில் சிறு குறிஞ்சான் பெரும் பங்கு வகிக்கிறது.

 

03.   ஜப்பானில் நடத்திய ஆய்வில், கொய்யா இலைத் தேனீரானது இன்சுலின் உற்பத்தியைப் பெருக்குவதும், உடல் எடையைக் குறைப்பதும் உறுதியானது. ஆனால் கர்ப்பிணிகள் இதைச் சாப்பிடக் கூடாது.

  

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================


 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக