01. ஆடாதொடை இலையையும் , வேரையும் சம அளவு எடுத்து, மிளகு சேர்த்து, ஊறல் குடி நீர் செய்து கொடுத்தால் உப்பிசம், காய்ச்சல், ஈளை, இருமல், இரைப்பு தணியும்.
02. ஆடாதொடைத் தண்டின் பட்டையை
எடுத்து குடிநீர் செய்தாகிலும், பொடி செய்தாகிலும் சுரம், இருமல், இளைப்பு, இரைப்பு ஆகிய நோய்களுக்குக் கொடுக்கலாம்.
03. இஞ்சி 10 கிராம், வெள்ளெருக்கம் பூ மூன்று, மிளகு 6 எண்ணிக்கை எடுத்துச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வர இரைப்பு தீரும்.
04. இஞ்சி முரப்பா சாப்பிட்டு வந்தால் இரைப்பு தீரும்.
05. இஞ்சிச் சாறு மாதுளம் பழச் சாறு வகைக்கு 15 மி.லி வீதம் எடுத்து 15 மி.லி தேனுடன் கலந்து மூன்று வேளை சப்பிட்டு வந்தால் இரைப்பு நீங்கும்.(121)
06. இண்டஞ் செடியின் சமூலத்துடன் தூதுவேளை, கண்டங்கத்தரி சேர்த்து எட்டில் ஒரு பங்காகக் காய்ச்சி 100 மி.லி வீதம் மூன்று நாள் கொடுத்தால் தீராத இரைப்பு குணமாகும். (125)
07. கல்யாண முருங்கைச் சாறு 30 மி.லி., வெள்ளை வெங்காயச் சாறு 30 மி.லி. அன்னக் கொதி நீருடன் காலை மட்டும் இளஞ்சூட்டில் சாப்பிட்டு வர நாள்பட்ட இரைப்பு தீரும். புலால், புகை, போகம் நீக்குக !
08. கிராம்பு, சுக்கு, மிளகு, பச்சைக் கற்பூரம் இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதை வெள்ளைத் துணியில் சிறு பொட்டலமாக வைத்துக்
கொண்டு முகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு (ஆஸ்துமா)
குறையும்.(1072)
09. தவசி முருங்கை இரசத்தை (சாறு) வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு, கொடுத்து வந்தால் மூக்கில் நீர் பாய்தல், உண்ணாக்கு நோய், ஐயம் (கபம்), இரைப்பு, பொடியிருமல் ஆகியவை தீரும்.
10. துத்திப் பூ சூரணம் அரைத் தேக்கரண்டி எடுத்து
சர்க்கரை கலந்து காலை மாலை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரைப்பு குணமாகும். (203) நுரையீரல் கபம் தீரும் (1406)
11. தூதுவேளைச்
சமூலத்தை (வேர், இலை, பூ, காய்)
50 கிராம் அரை லிட்டர் நீரில்
போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை பாலில் பருகி வர இரைப்பு, சுவாச
காசச் சளி ஆகியவகை தீரும். (1457)
12. விஷ்ணுகிராந்திப் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் இரைப்பு இருமல் குணமாகும். (182)
13. வேம்புப் பஞ்சாங்கச் சூரணம்
100 மில்லி கிராம் , நெய், தேன், பால் அல்லது வெண்ணெயில் கலந்து 90 நாட்கள் சப்பிட்டு வர இரைப்பு தீரும்.
===========================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக