01. தென்னம் பூவை வாயில் இட்டு மென்று தின்று வந்தால்
குடல் புண்கள் போன்ற உள்ரணங்கள் ஆறும்.(293)(461)
02. கொட்டைக்
கரந்தைச் செடியை உலர்த்திப் பொடி செய்து, கற்கண்டு
சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உள்ரணங்கள் குணமாகும்.((1716)
03. கொத்தமல்லியை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் உள் ரணம் குணமாகும். (459)
04. தாளிக்
கீரையை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து நெய் கூட்டி உணவுடன் உட்கொண்டு வந்தால் உள் உறுப்புகளில் ஏற்படும் புண்கள்
(இரணம்) ஆறும்.(621)
05. விளாம் பிசினை உலர்த்தி இடித்து தூள் செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் உண்டு வந்தால் விந்து ஒழுக்கு நிற்கும்.
(523) பெரும்பாடு தீரும்.
(1548) நீர் எரிச்சல் குணமாகும்.
(1647) உள் உறுப்பு இரணம் தீரும்.
(1661)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக