01.
சீரகத்தை
வறுத்து பொடியாக்கி, வாழைப் பழத்தில் தூவிச் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும். (276) (1907)
02.
மருதாணிப் பூவை எடுத்து சுத்தம் செய்து இரவு படுக்கப் போகும் முன் இரண்டு கொத்துகளைச் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். (1453)
03 திருநீற்றுப் பச்சிலை இலைகளைப் பறித்து நன்கு கசக்கி, அடிக்கடி அதை முகர்ந்து வந்தால் தலை பாரம் நீங்கும். (412) தூக்கமின்மை நீங்கும்; நன்கு தூக்கம் வரும். (1277)
04. வெங்காயச் சாறு ஒரு துளி கண்ணில் பட்டால் போதும். சிறிது எரிச்சலுக்குப் பின் ஓய்வுடன் நல்ல தூக்கம் வரும். (032)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக