01. தாழம்பூ சர்பத் செய்து மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் வராது.
(1014)
02. துளசி இலை சில எடுத்து குங்குமப்பூ சேர்த்து அரைத்துக் கொடுக்க அம்மை நோய் குணமாகும்.(1005)
03. பருத்திப் பிஞ்சு, அத்திப் பிஞ்சு, ஜாதிக் காய், சீரகம் ஆகியவை சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுத்து வந்தால் அம்மை நோய் குணமாகும்.(1013)
04. வேப்பிலையை அரைப் பிடி எடுத்து அரைத்து, சம அளவு மிளகுத் தூள் சேர்த்து இரண்டையும் கலந்து ஒரு சுண்டைக் காயளவு உள்ளங் கையில் வைத்து, ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றிக் குழைத்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். போதுமான வேப்பிலைகளை எடுத்து, மஞ்சள் துண்டுகளையும் அத்துடன் சேர்த்து, சிறிது வெந்நீர் ஊற்றி மைய அரைக்க வேண்டும். அந்தக் குழம்பினை தலைக்குக் கீழ் உடல் முழுதும் பூசிவிட வேண்டும். வேப்பிலைக் குழம்பு உலர்ந்தவுடன், பாயின் மேல் வேப்பிலைகளைப் பரப்பி அதில் படுக்க வைக்க வேண்டும். ஒரு வாரம் வரை இந்த வேப்பிலைப் பூச்சு தொடரவேண்டும். காய்ச்சல் இருந்தால் வேப்பிலை, மிளகு, தேன் கலவை மருந்தினை தினசரி மூன்று வேளைகள் வீதம்மிரண்டு நாள்கள் தொடருங்கள். அம்மை நோயும்காய்ச்சலும் சரியாகிவிடும். ஐந்து நாள் கழித்து தண்ணீரில் வேப்பிலை போட்டு 2 மணி நேரம் கழித்து குளிப்பாட்ட வேண்டும். நீர்த்த உணவும், மொந்தம் பழம், பப்பாளிபழம் ஆகியவையும் கொடுக்கலாம்.(ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல்).
============================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !
(02.
) அடைப்புக்
குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
=============================================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி
)14]
{28-05-2021}
=============================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக