மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கடி - பாம்புக்கடி (Snake Bite)

01.  அவரி வேர் 20 கிராம், அறுகம்புல் 30 கிராம், மிளகு 3 கிராம் மையாய் அரைத்து கோலிக்குண்டு அளவு காலை மாலை சாப்பிட்டு, இச்சா பத்தியம் இருக்க மருந்து வேகம் அனைத்தும் தீரும். இம்மருந்தை நாள்தோறும் 3 வேளை உப்பு, புளி நீக்கிச் சாப்பிடப் பாம்பு, தேள், பூரான், செய்யான் ஆகியவற்றின் நஞ்சு நீங்கும்.

 

02.     ஆடு தின்னாப் பாளை வேரினை எடுத்துக் கசாயம் செய்து குடித்தால் பாம்பின் விஷம் முறியும்.(893)

 

03.  ஈஸ்வரமூலி வேரை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில் போட்டு எட்டில் ஒரு பங்காகக் காய்ச்சி 30 மி.லி வீதம் 3 வேளையாகக் கொடுக்க உதிரச் சிக்கல் தீரும். பாம்புக்கடி, தேள் கடி விஷம் நீங்கக் கடிவாயில் இலையைக் கசக்கித் தேய்க்கலாம்.

 

04.  எருக்கஞ் செடியின் பிஞ்சு இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் பாம்புக் கடி விஷம் இறங்கிவிடும். (880)

 

05.  எருக்கஞ் செடியின் வேரை எடுத்து மை போல் அரைத்து பாம்பு கடித்த இடத்தில் பூசினால் விஷம் இறங்கும். (867)

 

06.  ரிசலாங் கண்ணி இலைச்சாறு 5 மி.லி எடுத்து, அதோடு மோர் சேர்த்துச் சாப்பிட பாம்பின் கடி நஞ்சு தணியும்.

 

07.  கரிசலாங் கண்ணிச்  சாறு 50 மி.லி. எடுத்து 200 மி. லி மோரில் கலந்து கொடுக்க பாம்புக் கடி விஷம் குறையும், நீங்கும்.

 

08.  சிலந்திநாயகம் இலைகள் ஐந்தாறு எடுத்து மென்று தின்ன, தேள், பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும். கடிவாயில் இலையை அரைத்துப் பூசலாம்.(888)

 

09.  சிலந்திநாயகம் இலையை அரைத்து 3 கிராம் எடுத்து, பசு வெண்ணெயுடன் கலந்து, காலை மாலை இரு வேளையாக உட்கொள்ள, பாம்பு நஞ்சு, கண் நோய், கழலை, உட்புண், கபம் ஆகியவை தீரும்

 

10.  சிறியாநங்கை  இலையைக் கொடுத்து பாம்புக் கடிக்கு, மெல்லச் சொல்லவேண்டும். நஞ்சு முறியும் வரை இலை கசக்காது. நஞ்சு முறிந்த பின்பு இலை கசக்கத் தொடங்கும்.

 

11.  சிறு குறிஞ்சான் இலையைக் கசக்கி பாம்புக் கடி, வண்டுக்கடி ஏற்பட்ட இடத்தில் தடவினால், விஷம் வெளியேறும். இரத்தம் விருத்தியாகும்.

 

12.  சிறு குறிஞ்சான் வேரைக் காய வைத்துப் பொடித்து, பாம்புக் கடிக்கு, ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில்  கலந்துகொடுக்க வேண்டும். உடனே , வாந்தி ஏற்படும். அத்துடன், பாம்பின் விஷமும் முறியும்.

 

13.  தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க பாம்புக் கடி விடம் நீங்கும்.

 

14.  தும்பை இலைச் சாறு எடுத்து 50 மி.லி உட்கொண்டால் தேள் கடி, பாம்புக் கடி விஷம் முறியும். (900) (1265)

 

15.  தும்பை இலைச் சாறு 100 மி.லி. எடுத்து, முற்றிய வாழை மரத்தின் அடிவாழைத் தண்டின் சாறு 100 மி. லி. எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கிச் சாப்பிட்டால் பாம்பின் விஷம் முறியும். (899)

 

16.  தும்பை இலைச் சாறினைப் பாம்பு கடித்தவர்களுக்குக் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும். குடித்தவுடன் பேதியாகும். மூன்று நாள் தூங்காமல் இருக்க வேண்டும். உப்பில்லாமல் சாப்பிட வேண்டும்.  (1400)

 

17.  தும்பைப் பூவைச் சாறு பிழிந்து மூக்கில் விடுவதுண்டு. பாம்புக்கடி நஞ்சாலுண்டான மூர்ச்சையினின்றும் உணர்ச்சி பெற இந்த வைத்தியம்.  இதன்பின் தும்பை இலையை அரைத்து உள்ளுக்குக் கொடுத்து, தும்பை இலைச் சாற்றைக் கடிவாயிலும் விட நஞ்சு நீங்கும்.

 

18.  நல்ல  பாம்பு கடித்து விட்டால், கடித்த இடத்திற்கு மேல் ஒரு கட்டுப் போட்டு விஷம் உடலெங்கும் பரவாதபடித் தடுக்க வேண்டும். பின்பு கடிவாயைக் கீறி இரத்தத்தைப் பிதுக்கி வெளியில் எடுக்க வேண்டும். இரத்தத்துடன் ஒரு பகுதி விஷமும் வெளியில் வர இதனால் வாய்ப்பு உண்டு. ஐந்தாறு வாழைப் பட்டைகளை விரித்து அதன்மேல் பாம்பு கடித்த நபரை கோவணத்துடன் அல்லது ஜட்டியுடன் படுக்கவைத்து, ஒருதம்ளர் வாழைப் பட்டைச் சாறை உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். ஒரு நாள் இரவு மட்டும் தூங்க விடக் கூடாது. இவ்வாறு செய்தால் நல்ல பாம்புக் கடியினால் எந்தவிதத் தீங்கும் நேராது. (ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மா நூல்)

 

19.  நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி) கழிச்சல் உண்டாகி பாம்புக் கடி விடம் வெளியேறும் .

 

20.  பிரமதண்டு சமூலம் எடுத்து அரைத்து 30 கிராம் உள்ளுக்குக் கொடுப்பதுடன் கடிவாயிலும் கட்டினால் பாம்புக் கடி விஷம் இறங்கும்.  (883)

 

21.  மாவிலங்க மரத்தின் வேர்ப்பட்டை கொட்டைப்பாக்களவு அரைத்துக் கொடுத்து வரப் பாம்பு நஞ்சு, வண்டு நஞ்சு நீங்கும்

 

 

22.  மாவிலங்க வேரை எடுத்து அதன் பட்டையை உரித்து அரைத்து அதிலிருந்து ஒரு கிராம் எடுத்து உள்ளுக்குக் கொடுத்தால் பாம்பு கடி நஞ்சு, வண்டு கடி நஞ்சு நீங்கும்.  (1563)

 

23.  வாழைப் பட்டைச் சாற்றை அருந்த வைத்தால் பாம்பு விஷம் முறியும்.

 

24.  வாழைத் தண்டு ( முற்றிய வாழை மரத்திலிருந்து எடுத்து ), சாறு பிழிந்து, 100 மி.லி எடுத்து அதனுடன் தும்பைச் சாறு 100 மி.லி. சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கிச் சாப்பிட்டால் பாம்பு விஷம் முறியும்.    (899)

 

25.  வெள்ளருகு பறித்து வந்து அரைத்து சாறு எடுத்து 25 மி.லி குடித்தால் பாம்பு கடி நஞ்சு இறங்கும்.  (1588)

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

 

==========================================================

 

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக