மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

உதடு வெடிப்பு (50) (Sore Lips)

01.   கரும்புத் தோகையை எரித்துச் சாம்பலாக்கி வெண்ணெய்யுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் குணமாகும். (218) (979)

 

02.   சித்திரப் பாலாடைக் கீரையைப் பருப்புடன் சேர்த்து உணவுடன் உண்டு வர  உதடு வெடிப்பு, வாய்ப் புண் குணமாகும்.(256)

 

03.   அம்மான் பச்சரிசி இலையைச்  சமைத்து உண்ண வறட்சி அகலும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, ரணம் தீரும்

 

04.   அத்திக் காயை உட்கொண்டால் உதடு வெடிப்பு குணமாகும் (1180)

 

05.   ஆலம்பாலைக் காலை மாலை தடவி வர, வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

 

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக