01. தவசி முருங்கை இரசத்தை (சாறு) வேளைக்கு ஒரு
தேக்கரண்டி அளவு, கொடுத்து வந்தால்
மூக்கில் நீர் பாய்தல், உண்ணாக்கு நோய், ஐயம் (கபம்),
இரைப்பு, பொடியிருமல் ஆகியவை தீரும்.
02. நாயுருவிச் சாம்பல் ஒரு சிட்டிகை எடுத்து சிறிது தேன்விட்டுக் குழைத்து உள் நாக்கில் தடவி வந்தால் உள் நாக்கு வளர்ச்சி ( டான்சிலிடிஸ்) நீங்கும்.
03. புளி, உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவி வந்தால் உண்ணாக்கு நோய் (டான்சில் நோய்) குணமாகும்.
(1304)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக