மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 5 ஜூன், 2021

சிறுநீரகம் - கல் அடைப்பு (Biliari Calculi)

 

01.  கொள்ளு ஒரு பங்குக்கு பத்துப் பங்கு நீர் விட்டுக் காய்ச்சி, 600 மி.கிராம் இந்துப்பு சேர்த்துக் கொடுத்தால் இருமல், கல்லடைப்பு போகும்.

 

02.  சிறுகண் பீளை இலைச் சாற்றில் 50 மி.லி வீதம் குடித்துவர பெரும்பாடு, கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல் போகும்.

 

03.  சிறுபீளை சமூலம், சிறுநெருஞ்சி, மாவிலங்கை வேர், பேராமுட்டி வேர், இவைகளைச் சமனெடை எடுத்து போதிய நீர் விட்டு, எட்டில் ஒரு பங்காய்க் காய்ச்சிக் குடித்துவரக் கல்லடைப்பு (சிறு நீரகக் கற்கள்)  நீங்கும்.

 

04.  சிறுபீளை வேர்ப் பட்டை, பனை வெல்லம் வகைக்கு 50 கிராம் எடுத்துக் கூட்டி மை போல் அரைத்து 50 மி.லி பசுவின் பாலில் கலந்து, காலை மாலைகளில் உட்கொண்டு வர கல்லடைப்பு, நீரடைப்பு, பெரும்பாடு முதலியன நீங்கும்.

 

05.  தொட்டாற்சுருங்கி வேரை ஒரு பலம் எடுத்து பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் லிட்டர் நீர் விட்டு அடுப்பிலேற்றி நான்கில் ஒரு பங்காகக் காய்ச்சி, வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் (1 Ounce = 28 m.l.) தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற நீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.

 

06.  நத்தைச் சூரி விதையை எடுத்து வறுத்து, பொடித்து நீர் விட்டுக் காய்ச்சி, கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கல்லடைப்பு தீரும்.  (1376)

 

07.  நத்தைச் சூரி விதை 10 கிராம் எடுத்து வறுத்துப் பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி, வடிக்கட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு வரக் கல் அடைப்பு, சதை அடைப்பு, வெள்ளை படுதல் ஆகியவை தீரும்.

 

08.  நெருஞ்சில் வித்தினைப் பாலில் அவித்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை 1-1/2 தேக்கரண்டி அளவு இளநீரில் கலந்து சாப்பிட்டு வரச் சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்

 

09.  நெருஞ்சில் விதையைப் பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து தினசரி இரு வேளைகள் இளநீரில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகப் பாதையில் உள்ள சதையடைப்பு நீங்கும்.  (1387)  கல்லடைப்பு நீங்கும்.  (1463)

 

10.  பிணா இலையைக் கஷாயமாக்கி காலை மாலை குடித்து வந்தால் கல்லடைப்பு நீங்கும்.(1050)

 

11.  மாவிலங்க மரப் பட்டையை எடுத்துக் குடிநீர் செய்து காலை மாலை அருந்தி வந்தால் கல்லடைப்பு நீங்கும்.

 

12.  மாவிலங்கப் பட்டைக்  கசாயம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல்லடைப்பு நீங்கும். (1541)  வயிற்றுப் புண் குணமாகும். (1518) கண்டமாலை புண் குணமாகும். (1593)  விஷகடி தீரும்.  (1608)

 

13.  முள்ளங்கிச் சாறு, வாழைத் தண்டுச் சாறு இரண்டையும் சம அளவு சேர்த்து தினசரி 50 மி.லி வீதம் பருகி வந்தால் கல் அடைப்பு நீங்கும்.(1052) (1197)

 

14.  வாழைக் கிழங்கில் இரவில் சிறிது துவாரம் செய்து காலையில் அதில் ஊறியுள்ள நீரை எடுத்து 80 – 150 மி.லி  வீதம் குடித்து வந்தால் உடலுக்குக் குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சல் நீக்கும்; பெருவயிறு நோய் தீரும்; கல்லடைப்பு விலகும்.

 

15.  வாழைத்தண்டுச் சாறு 25 மி.லி., முள்ளங்கிச் சாறு 25 மி.லி எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து அருந்தி வந்தால் கல்லடைப்பு நிங்கும்.  (1052) (1197)

 ==========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

==========================================================




 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக