1) ஆவாரை விதையை நெல்லிக் காய்ச் சாறு, நெருஞ்சில் இலைச் சாறு, வாழைக் கிழங்குச் சாறு, சீந்தில் கொடிச் சாறு ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஊறவைத்து, காய்ந்த பிறகு, பொடி செய்து கொள்ள வேண்டும். இப்பொடியில் ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து, வெளியாகும். (ஆவாரை காண்க)
2) கருங்காலிப் பட்டை, சாரணை வேர், சிறு நெருஞ்சில், சிறு பீளை, சீரகம், சோம்பு, நீர்முள்ளி விதை, பேராமுட்டி, மாவிலங்கப் பட்டை தலா 100 கிராம் என எல்லவற்றையும் ஒன்றாகக் கலந்து பொடிக்கவும். இதில் 5 கிராம் எடுத்து, இரண்டு தம்ளர் நீர் சேர்த்து, கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டக் காய்ச்சி, காலை மாலையில் தொடர்ந்து 21 நாட்கள் பருகி வந்தால், சிறு நீரகக் கற்கள் கரையும்
3) கன்பிள்ளை சமூலம் 50 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை 100 மி.லி. பருகி வர, சிறு நீரகக் கற்கள் கரைந்து விடும்.(1051)
4) கொள்ளு ஒரு பங்கு எடுத்து ஐந்து பங்கு நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதனுடன் அரை தேக்கரண்டி இந்துப்பு சேர்த்துப் பருகி வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
5) சிறு பீளை, சிறு நெருஞ்சில் ஆகியவற்றைச் சமனளவு சமூலமாக ( வேருடன் பிடுங்கிய முழுச் செடியாக ) எடுத்து மைபோல் அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு கால் லிட்டர் தயிரில் காலை மாலையாய் இரண்டு மாதங்கள் சாப்பிடச் சிறு நீரகக் கல் கரையும்.
6) சிறு பீளை, சிறு நெருஞ்சில் இரண்டு செடிகளையும் எடுத்து வந்து சுத்தம் செய்து ஒன்றாக அரைத்து சிறு உருண்டை ஒன்றைத் தயிரில் கலக்கி அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும். (989)
7) சிறு பீளைச் செடியை வேருடன் பிடுங்கி (சமூலம்), நன்றாக அலசி 50 கிராம் அளவுக்கு எடுத்து, ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் காலை மாலை இரு வேளையும் கொடுத்து வந்தால் சிறு நீரகக் கற்கள் முற்றிலுமாகக் கரைந்து விடும்.
8) சிறுபீளை வேர், சிறுகீரை வேர், சிறுநெருஞ்சில் வேர், சீரகம், ஆகியவை வகைக்கு 40 கிராம் எடுத்து, சிதைத்து, ஒரு லிட்டர் நீரிலிட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் காலையில் பாதி மாலையில் பாதியாகக் குடித்து வரக் சிறு நீரகக் கல் கரைந்துவிடும்.
9)
சிறு
பூனைக்காலி வேரினை எடுத்து வந்து சிதைத்து கசாயம் வைத்து இரண்டு வேளைகள் குடித்தால் சிறுநீர்க் கட்டினை
உடைக்கும். (1499)
10)
சிறு
பூனைக்காலி சமூலம் எடுத்து வந்து கசாயம் வைத்துக் காலை மாலை 50 மி.லி குடித்தால் சிறுநீரகக் கற்கள்
கரையும்.(1525)
11) தர்பூசணி விதையையும் நெருஞ்சி முள்ளையும் சேர்த்துக் குடிநீர் செய்து 60 மி.லி இரு வேளை கொடுக்க, சிறுநீர் அதிகரித்து, சிறுநீரகக் கற்கள் கரையும் (தர்பூசணி காண்க.)
12) துளசி இலைகளை ஒரு செம்புப் பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் எழுந்து, துளசி இலைகளையும் அது ஊறிய நீரையும் அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் குறையும். இரத்தம் தூய்மை பெறும். உடலும் புத்துணர்வு அடையும் (துளசி காண்க.)
13)
நெருஞ்சில் (சிறு நெருஞ்சில்) சிறு பீளை இரண்டையும் சமனளவு சேர்த்து அரைத்து சிறு உருண்டை எடுத்து தயிரில் கலக்கி அருந்தி வந்தால் சிறு நீர்க்கல் கரையும். (989)
14) பரங்கி விதை இரண்டு தேக்கரண்டி எடுத்து
200 மி.லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் சிறு நீரைப் பெருக்கும். மேலும் சின்னச் சின்ன சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.
15) வாழைத் தண்டின் சாற்றை 60 மி.லி தினசரி குடித்துவந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும் (வாழை காண்க.)
16) வாழைத் தண்டுச் சாற்றினை வாரம் 3 முறை 100 மி.லி வீதம் அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் கரையும்.
17) வாழைத் தண்டைச் சமைத்துச் சாப்பிடு வந்தால் சிறுநீர்க் கற்கள் கரையும். (1630)
18) வாழை மரத்தில் ஒரு குச்சியைச் செருகி வைத்தால், அதிலிருந்து சாறு சொட்டும். அந்தச் சாறினைச் சேகரித்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
(1631)
19) வெள்ளரி விதைகளுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து இரு வேளைகள் குடித்து வந்தால், சிறிய அளவில் உள்ள சிறுநீரகக் கற்கள் கரையும்
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )22]
{05-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக