01. அம்மான் பச்சரிசி பாலைத் தடவிவர நகச்சுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.
02. சித்திரப் பாலாடைக் கீரையின் பாலைக் கால் ஆணிக்குத் தடவி வர கால் ஆணி குணமாகும்.(1042) (1792)
03. சித்திரமூலச் செடியின் வேரினை எடுத்து எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைத்து, ஆணி உள்ள இடத்தில் இரவு நேரத்தில் பற்றுப் போட வேண்டும். இவ்வாறு 21 நாள்கள் செய்தால் கால் ஆணி உதிர்ந்துவிடும். அம்மான் பச்சரிசிச் செடிகளின் இலைகளை அரைத்தும் கட்டலாம். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல்)
04. பப்பாளி மரப் பாலினை வைத்து வந்தால், கால் ஆணி இருந்தால், அவை சரியாகும்.
05. .மருதாணி இலை
ஒரு கைப்பிடி எடுத்து சிறுதுண்டு மஞ்சளும் ஐந்தாறு கிராம்பும் சேர்த்து அரைத்து காலில் ஆணி உள்ள இடத்தில் இரவில் கட்டி வர வேண்டும் இவ்வாறு மூன்று வாரங்கள் கட்டி வந்தால் ஆணி உதிர்ந்துவிடும்.
06. மருதாணி இலை கைப்பிடி அளவு, ஒரு மஞ்சள் துண்டு, சிறிது வசம்பு, கற்பூரம் ஆகியவற்றை ஒன்றாக அம்மியில் வைத்து அரைத்து கால் ஆணி மீது வைத்து இலையால் மூடிக் கட்டினால் ஆணி மறைந்து போகும்.
07. மருதாணி இலைகளை (ஐவான் இலைகள்) கொண்டுவந்து மஞ்சள் ஒரு துண்டும், இலவங்கம் (கிராம்பு) ஐந்தாறும் சேர்த்து மைபோல் அரைத்து, இரவு நேரத்தில் ஆணிகள் உள்ள பகுதியில் வைத்துக் கட்ட வேண்டும். (முன்னதாக குதி காலகளில் உள்ள ஆணிகளை முள் களைவது போல், இரத்தம் வரும் வரை களைந்து கொள்ள வேண்டும்.) தொடர்ந்து 21 நாள்கள் இவ்வாறு செய்ய வேண்டும். கால் ஆணிகள் விரைவில் உதிர்ந்துவிடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல்)
08. மருதாணி இலை, மஞ்சள், வசம்பு, சிறிதளவு கற்பூரம் ஆகியவற்றை எடுத்து அரைத்து காலில் கட்டி வந்தால் கால் ஆணி குணமாகும்.
(1488)
09. மருதாணி வேரின் பட்டையை உரித்து அரைத்துக் கட்டி வந்தால் கால் ஆணி குணமாகும். (1045) (1454)
(1478)
10. மருதாணியும் மஞ்சளும் சேர்த்து அரைத்து கால் ஆணி மீது இரவு தோறும் கட்டி வந்தால் கால் ஆணி விரைந்து அற்றுப் போகும். (1044)
11. வெள்ளருகு பறித்து வந்து மைய அரைத்து வைத்துக் கட்டினால் கால் ஆணி குணமாகும்.
(1043) (1879)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக