மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 5 ஜூன், 2021

சுரம் - டெங்குசுரம் (Dengue Fever)

 

01.  நிலவேம்பு 10 கிராம் எடை, கிச்சிலித் தோல் 150 கிராம், கொத்தமல்லி 150 கிராம் இவைகளை வெந்நீரில் சேர்த்து மூடிவைத்து, ஒரு மணி நேரம் சென்ற பின் வடிக்கட்டி 30 மி,லி. வீதம் தினசரி 2 – 3 முறை கொடுக்கலாம். மேற்கூறிய டெங்கு சுரம் தீரும்.

 

02.  நிலவேம்பு இலைக் கருக்கு (கஷாயம்) சிக்கன்குனியா, டெங்கு போன்ற சுரங்களுக்கு மிகச் சிறந்தது. வாதசுரம், நீர்க்கோவை, மயக்கம், பல்வகையான  சுரங்களும் நிலவேம்புக் கருக்கு குடித்து வரக்  குணமாகும்.

 

03.     நிலவேம்பு சமூலத்துடன், மிளகு, சுக்கு, வெட்டிவேர், சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்சி, வடிகட்டி காலை மாலையாக இரண்டு வேளைகள், தலா 60 மி.லி வீதம் குடித்து வந்தால் அனைத்து விதமான சுரங்களும் தீரும். டெங்கு போன்ற சுரமும் குணமாகும்.

 

04.  பப்பாளி இலைச் சாறு 30 மி.லி முதல் 60 மி. லி வரை டெங்குக் காய்ச்சல் குறிகுணங்கள் இருக்கும் பொழுது தினசரி இரு  வேளைகள் அருந்தி வந்தால் நல்ல பலன் தரும்.

 

05.     பவளமல்லி இலையையும் பனங் கற்கண்டும் சேர்த்துக் கசாயம் வைத்து காலை மாலையாக 60 மி.லி. வீதம் அருந்தி வந்தால் டெங்கு காய்ச்சல் தணியும்.

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

=========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக