மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 6 ஜூன், 2021

சுரம் - நச்சு சுரம் (Yellow Fever)

 

01.   அதிமதுரம், பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம் அனைத்தையும் அளவோடு சேர்த்து கசாயம் வைத்துக் குடித்து வந்தால் நச்சுக் காய்ச்சல் குணமாகும்.(1470) (1687)

 

02.   ஆடாதொடை, கண்டங்கத்தரி, பற்பாடகம், சுக்கு, விஷ்ணு கிராந்தி ஆகியவை சம அளவு எடுத்து நீர்விட்டு சுண்டக் காய்ச்சி வேளைக்கு 25 மி.லி வீதம் அருந்தி வந்தால் நச்சு சுரம் குணமாகும். (1469)(1686)

 

03.   பற்படாகம், கண்டங்கத்தரி, ஆடாதோடை, சுக்கு, விஷ்ணுக்காந்தி ஆகியவை வகைக்கு 40 கிராம் இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி நான்கு வேளையாக இரண்டு நாளைக்குக் கொடுக்க, நச்சுச் சுரம் போகும். (1469) (1686)

 

04.   பற்படாகம், மாம்பட்டை, கோரைக் கிழங்கு, இலவம் பிசின், கஞ்சாங்கோரை, வெட்டிவேர், சுக்கு, மல்லி ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் இடித்து  ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி, நான்கு வேளையாகக் குடிக்க பேதியுடன் கூடிய நச்சுச் சுரம் தீரும்

 

05.   பற்படாகம், கண்டங்கத்தரி, ஆடாதொடை, சுக்கு, விஷ்ணுகிராந்தி ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் நச்சுக் காய்ச்சல் குணமாகும்.  (1469) (1686)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக