மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 5 ஜூன், 2021

சுகப் பிரசவம் (Normal Delivery)

01.   ஆடாதோடைச் செடியை வேருடன் பிடுங்கிவந்து இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி அரைத் தம்ளர் அளவு உள்ளுக்குக் கொடுத்தால் சற்று நேரத்தில் சுகப் பிரசவம் ஆகிவிடும்.( ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

02.   கோவை இலைகளை இரண்டு பிடி அளவு எடுத்துக் கசக்கிச் சாறு பிழிந்து அரைத் தம்ளர் அளவு எடுத்து வடிகட்டி உள்ளுக்குக் கொடுத்தால் சற்று நேரத்தில் சுகப்பிரசவம் ஆகிவிடும்.( ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

03.   முடக்கத்தான் கொடியை வேருடன்  கொண்டு வந்து,சுத்தம் செய்து மைய அரைத்து அடிவயிறு முழுவதும் தடவி விட வேண்டும். அத்துடன் ஒரு தம்ளர் பாலைக் காய்ச்சி ஆறவைத்து பாதிப் பூண்டினை எடுத்து உரித்து மைய அரைத்துப் பாலுடன் கலந்து குடிக்கச் செய்ய வேண்டும். சற்று நேரத்தில் சுகப் பிரசவம் ஆகிவிடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

==========================================================

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக