மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 5 ஜூன், 2021

சுரம் - கபவாத சுரம் (நுரையீரல் அழற்சிக் காய்ச்சல்) (pneumonia)

01.  நுரையீரலில் ஏற்படும் அழற்சியால் உண்டாகும் இந்தச் சுரம் கபவாதச் சுரம் (கபம் = சளி; வாதம் = வளி, வாயு) என்றும் ஆங்கிலத்தில் நிமோனியா (Pneumonia) சுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

 

02.  அமுக்கரா வேர்ச் சூரணம் 5 கிராம் தேனில் குழைத்து காலை மாலை தினசரி கொடுத்து வந்தால் கபவாதச் சுரம் நீங்கும்.

 

03.  ஆடாதொடை மணப்பாகு:- ஆடாதொடை இலைகள் 700 கிராம் எடுத்து, நறுக்கி, நெய்யில் வதக்கி, இலவங்கம் 10 கிராம், ஏலக்காய் 4 , சிற்றரத்தை 10 கிராம், அக்கரகாரம் 10 கிராம் ஆகியவற்றைத் தூள் செய்து போட்டு, பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து, தேன் பதமாகக் காய்ச்சி ஒரு சீசாவில் அடைத்து வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை தீரும். 3 வேளையாக தொடர்ந்து கொடுத்து வந்தால், கபவாத சுரம் [ நிமோனியா காய்ச்சல் ] மார்ச்சளி, காசம், நீர்த்த ஆஸ்துமா, எலும்புருக்கி நோய், கபம், இருமல் ஆகியவை போகும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டரை மி.லி முதல் 5 மி.லி வரை கொடுக்கலாம்.

 

04.  ஆடாதோடை இலைகள் 700 கிராம் எடுத்து நறுக்கி நெய்யில் வதக்கி, அக்கரகாரம், சித்தரத்தை ஆகியவை வகைக்கு 10 கிராம், இலவங்கம் 10 கிராம், ஏலக்காய் 4 ,ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப் பொன் வறுவலாய் வறுத்து  2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிக்கட்டி ஒரு கிலோ கருப்பட்டி சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சித் தயாரிப்பதே ஆடாதோடை மணப்பாகு. இந்த மணப்பாகு ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து தினசரி 3 வேளை தொடர்ந்து கொடுத்து வந்தால் கபவாதச் சுரம் தீரும்.

 

05.  கண்டங்கத்தரி சமூலம் 30 கிராம், ஆடாதோடை 30 கிராம், விஷ்ணுகாந்தி, பற்படாகம் இரண்டும் 30 கிராம், சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில்போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி. லி. வீதம் தினசரி 4 முதல் 6 வேளை கொடுத்து வந்தால்  கபவாதச் சுரம் தீரும்.

 

06.  கண்டங்கத்தரி சமூலம் ஒரு பிடி, ஆடாதோடை இலை ஒரு பிடி, விஷ்ணுகாந்தி, பற்படாகம் இரண்டும் ஒரு பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி4 முதல் 6 முறை 100 மி.லி வீதம் சாப்பிட புளூ (Flu) சுரம், நிமோனியா சுரம், மண்டை நீரேற்றக் காய்ச்சல் முதலியவை தீரும்

 

07.  தூதுவேளை, கண்டங்கத்தரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி வகைக்கு 30 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு எட்டில் ஒரு பங்காகக் காய்ச்சி ஒரு மணிக்கு ஒரு முறை 5 முதல் 10 மி.லி வரைக் கொடுத்து வந்தால் கபவாதச் சுரம் தீரும்.

 

08.  தூதுவேளை, கண்டங்கத்திரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு எட்டில் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக் குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப வாதச் சுரம் (நிமோனியா) சன்னி வாதச் சுரம் (டைபாய்டு) குறையும்.

 

09.  நிலவேம்பு சமூலத்துடன், மிளகு, சுக்கு, வெட்டிவேர், சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்சி, வடிகட்டி காலை மாலையாக இரண்டு வேளைகள், தலா 60 மி.லி வீதம் குடித்து வந்தால் அனைத்து விதமான சுரங்களும் தீரும். டெங்கு போன்ற சுரமும் குணமாகும்.

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக