மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

கால் - செருப்புக் கடி இன்ன பிற.

 

         கால்அரிப்பு

01.   இலுப்பைப் பூவைக் கஷாயம் செய்து புண்களின் மீது தடவி வந்தால் கால் அரிப்பு நீங்கும்.

        

         கால்கண்ணாடிக் குத்து

01.   வாழைப்பழத் தோலைக் கண்ணாடி குத்திய இடத்தில் வைத்துக் கட்டினால் இரத்தப் போக்கு நின்று  விரைவில் குணமாகும். (535)

 

         கால் குதிகால்வலி

01.   எருக்கின் :பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குதிங்கால் வலி குணமடையும்.

 

02.   தவிடையும், உப்பையும் சேர்த்து வறுத்து ஒற்றடம் கொடுத்தால் குதிகால் வலி சரியாகும். (1762)

 

              கால்செருப்புக் கடி

01.   பச்சைத் தென்னை ஓலையைத் தணலில் போட்டுக் கருக்கி பட்டுப் போல் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி, பூசி வந்தால் மூன்றே நாளில் செருப்புக் கடி குணமாகும்.(422)

 

02.   பச்சை மூங்கில் குச்சியைச் சிறு துண்டுகளாக வெட்டி நீர் விட்டு மைய அரைத்து செருப்புக் கடி புண் மீது தடவி வந்தால், குணமாகும். (1012)

                

           கால்புண்

01.   இலுப்பைப் பூவைக் கஷாயமாக்கி அந்த நீரில் கால்களைக் கழுவி வந்தால் பெரியவர்களுக்கு  கால்களில் உள்ள புண்கள் ஆறும். (451)

 

                 கால்புரையோடிய புண்

01.   அத்திப் பாலை புரையோடிய புண் மீது தடவி வந்தால் புண் விரைவில் குணமாகும் (1161)

 

            கால்முள் வெளியேற

 

01.   அம்மான் பச்சரிசிப் பாலை முள் குத்திய இடத்தில் தடவி வந்தால், ஓரிரு நாளில் முள் வெளியேறி விடும். (1160)

 

02.   எருக்கம் பாலை, [ காலில் முள் குத்திய இடத்தைச் சுற்றி ஊசியால் சிறிது களைந்து அகலப் படுத்தி, ] அந்த இடத்தில் வைக்க வேண்டும். மறு நாள் சற்று களைந்து முள்வாங்கியால் முள்ளை எடுத்திடலாம்.

 

03.   ஓமம் அல்லது எள்ளினை அரைத்து முள் குத்திய இடத்தில் வைத்து கட்டுப் போட வேண்டும். மறு நாள் கண்டிப்பாக முள் வெளி வந்துவிடும். (ஆதாரம்: (இனம் 2 & 3.)நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

==========================================================


 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக