01. அரச மரத்துப் பாலைத் தடவி வந்தால், கால் பித்த வெடிப்புக்கு நல்லது. பித்த வெடிப்பு குணமாகும். (421)
02. எலுமிச்சைச் சாறுடன் மாமரப் பிசினைக் கலந்து பித்த வெடிப்புகளுக்குப் பூசலாம்
03. ஏலக்காய், வேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால், குணமாகும்.
04. கண்டங் கத்தரி இலைச் சாறினைப் பிழிந்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து போட்டால் கை கால் பித்தவெடிப்புகள் குணமாகும். (435)
05. கண்டங்கத்தரி இலைச் சாறு, தேங்காயெண்ணெய் அல்லது ஆளி விதை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி பாதங்களில் தடவினால் பித்த வெடிப்புகள் சீராகும்.
06. கற்றாழைச் சோற்றை எடுத்து இரவில் பாதம் முழுதும் தேய்த்து விட்டு உறங்க, பாத வெடிப்பு, பாத எரிச்சல் ஆகியவை தீரும்.
07. மருத மர இலை பத்து கிராம் எடுத்து அரைத்துப் பாலில் கலந்து இரு வேளை மூன்று நாட்கள் குடித்தால் பித்த வெடிப்பு நீங்கும்.
08. மாசிக் காய், கடுக்காய், விளக்கெண்னெய், வேப்ப எண்ணெய், தேங்காயெண்ணை ஆகியவற்றைச் சரி சமமாகக் கலந்து தடவ, பித்த வெடிப்புக் குணமாகும். (446)
09. மாசிக்காயைச் சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக அரைத்துப் பூசினால் பித்த வெடிப்பு மறையும்.
10. மாமரத்துப் பிசினை எடுத்து பித்த வெடிப்பில் தடவி வந்தால் பித்த வெடிப்பு சரியாகும்.
(1977)
11. வேப்ப எண்ணெயை மஞ்சள் சேர்த்துப் போட்டால் பித்த வெடிப்புக் குணமாகும். (423) (1152) (1872)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக