01. நல்ல வேளைச் செடியின் விதைகளை நெய் சேர்த்து வறுத்து
அரைத்து தூளாக்கி, சிறுவர்களுக்கு அரை கிராம், பெரியவர்களுக்கு நான்கு கிராம் என்ற அளவில் காலை மாலை 3 நாட்கள் உள்ளுக்குக் கொடுத்து சிறிது வெந்நீர் குடிக்கச் செய்ய வேண்டும். நான்காவது நாளில்
அரைத் தேக்கரண்டி விளக்கெண்ணெய் உள்ளுக்கு கொடுத்தால் பேதியாகும். குடலில் உள்ள தட்டைப் புழுக்கள்
வெளியாகும்.
02. பரங்கி விதையை வறுத்து, பொடித்து, ஒரு தேக்கரண்டி அளவு பொடியுடன் சர்க்கரை சேர்த்து இரவில் அருந்தி, காலையில் விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு குடித்தால், குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் வெளியேறும்.
03. மாதுளம் மரப் பட்டை அல்லது வேர்ப் பட்டையைப் பச்சையாக எடுத்து, எடைக்கு எட்டு
மடங்கு தண்ணீர் சேர்த்து, பாதியாகச் சுண்டக்
காய்ச்சி, காலை நேரத்தில் 30 மி.லி
அருந்தினால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் வெளியேறும்.
04. மாதுளம் மரப் பட்டை அல்லது வேர்ப் பட்டையைப் பச்சையாக எடுத்து, எடைக்கு எட்டு
மடங்கு தண்ணீர் சேர்த்து, பாதியாகச் சுண்டக்
காய்ச்சி, காலை நேரத்தில் 30 மி.லி
அருந்தினால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் வெளியேறும்.
05. வெள்ளரி விதையை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள தட்டைப் புழுக்கள் வெளியேறும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )20]
{03-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக