01. அரைக் கீரையை நெய் விட்டு சமைத்து உண்டு வந்தால் டைபாய்டு, சளிக் காய்ச்சல் ஆகியவை குணமாகும் (132)
02. எலுமிச்சம் பழச் சாற்றினை இளநீரில் கலந்து பருகினால் டைபாய்டு சுரம் கட்டுப்படும்.
03. தூதுவேளை, கண்டங்கத்தரி ,பற்பாடகம், விஷ்ணுகாந்தி அகியவை வகைக்கு 30 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு எட்டில் ஒன்றாகக் காய்ச்சி ஒரு மணிக்கு ஒரு முறை 5 மி.லி. முதல் 10 மி.லி.வரை கொடுத்து வந்தால் சன்னி வாதச் சுரம் ( டைபாய்டு காய்ச்சல் ) தீரும் (197)
04. தூதுவேளை, கண்டங்கத்திரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி
வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு எட்டில் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக்
குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி
முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப
வாதச் சுரம் (நிமோனியா) சன்னி வாதச் சுரம் (டைபாய்டு)
குறையும்.
05.
தூதுவேளை, கண்டங்கத்தரி, பற்படாகம், விஷ்ணுகிராந்தி ஆகியவை சம அளவு எடுத்து நீரில் இட்டு, சுண்டக் காய்ச்சி, ஒரு மணிக்கு ஒரு முறை பத்து மி.லி வீதம் மூன்று வேளைகள் கொடுத்து வந்தால் டைபாய்டு
காய்ச்சல், சன்னி சுரம் ஆகியவை குணமாகும். (197)
(1434)
06. நிலவேம்பு சமூலத்துடன், மிளகு, சுக்கு, வெட்டிவேர், சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்சி, வடிகட்டி காலை மாலையாக இரண்டு வேளைகள், தலா 60 மி.லி வீதம் குடித்து வந்தால் அனைத்து விதமான சுரங்களும் தீரும். டெங்கு போன்ற சுரமும் குணமாகும்.
07.
புன்னைப் பூவை நிழலில் உலர்த்தித் தூள்
செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு காய்ச்சல் தீரும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )22]
{05-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக